இந்த உடற்பயிற்சிகள் செய்தால் போதும்… மாதவிடாய் வலியை சுத்தமா மறந்துவிடலாம்!!!

நீங்கள் வலிமிகுந்த மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் எரிச்சலூட்டும் வீக்கம் ஆகியவற்றை அனுபவிப்பவராக இருந்தால், ​இனி உங்கள் வலியைப் பற்றி மறந்து விடுங்கள். ஆச்சரியமா இருக்கா… உண்மை தான். கீழே சொல்லப்பட்டுள்ள உடற்பயிற்சிகளைச் செய்வது மாதவிடாய் வலி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

நடைபயிற்சி
நடைபயிற்சி உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மாதவிடாய் வலியைப் போக்கவும் எளிதான வழியாகும். மேலும் இது பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் உணரும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உங்கள் சுழற்சியின் பிற்பகுதியில் உங்கள் நுரையீரல் சிறப்பாக செயல்படுவதால், நடைபயிற்சி உங்கள் மாதவிடாயின் முடிவில் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.

முழங்கால் முதல் மார்பு வரை நீட்டுதல்
இந்த நிதானமான உடற்பயிற்சி உங்கள் அடிவயிற்றில் உள்ள தசைப்பிடிப்பைத் தணிக்க உதவும். உங்கள் முதுகு தரையில் படுமாறு படுத்து, ஒரு காலை நீட்டவும். பின்னர் மெதுவாக மற்ற முழங்காலை உங்கள் கன்னத்தை நோக்கி இழுக்கவும். இந்த தோரணையை சில நிமிடங்கள் வைத்திருங்கள் மற்றும் மறு காலால் மீண்டும் இதையே செய்யவும்.

யோகா
மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், உங்கள் உள் அமைதியைக் கண்டறிய உதவுவதற்கும் உதவுவது போல யோகாவானது தசைப்பிடிப்பு, தசைச் சோர்வு மற்றும் வலி போன்ற பல விரும்பத்தகாத மாதவிடாய் அறிகுறிகளையும் குறைக்க உதவும். உங்கள் மாதவிடாய் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த பயிற்சிகளைச் செய்வது குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.

உட்கார்ந்த கால்களுடன் முன்னோக்கி வளைதல்
உங்கள் கால்களை நீட்டிக் கொண்டு, உங்கள் இரு கைகளையும் முன்னோக்கி வளைத்து கால்கள் மீது வைக்கவும். இதன் போது உங்கள் வயிற்றை உள்நோக்கி இழுத்தவாறு இந்த நிலையில் 3 நிமிடங்கள் வரை வைத்திருங்கள்.

லேசான எடை தூக்குதல்
உங்கள் மாதவிடாய் வலியைக் குறைக்க முயற்சிக்கும்போது, கடுமையான ​​உடற்பயிற்சி செய்வது சிறந்த யோசனையாக இருக்காது. ஆனால் குறைவான எடை கொண்ட எடை தூக்குதல் உண்மையில் எரிச்சலூட்டும் வலிகளைத் தணிக்க உதவும்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிரபல நடிகர் தற்கொலை? 11வது மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவு!!

தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…

8 minutes ago

பிரம்மாண்ட படத்தில் நடிக்க முடியாதபடி பண்ணிட்டாங்க? பிரபல ஹீரோவை கைகாட்டும் ஸ்ரீநிதி ஷெட்டி…

கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…

56 minutes ago

பெண்களை மதிக்கிற மாதிரி நடிப்பாங்க; ஆனா சுயரூபமே வேற- மாளவிகா மோகனன் யாரை சொல்றாங்க?

கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…

3 hours ago

பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!

தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…

3 hours ago

தவெகவின் உண்மையான கட்டமைப்பு என்னவென்று இன்று தெரியும்.. ஆதவ் அர்ஜூனா சஸ்பென்ஸ்!

தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…

3 hours ago

This website uses cookies.