வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். பல முறை குழந்தைகள் பசியின்மை, வயிற்று வலி அல்லது வயிற்றின் கீழ் பகுதியில் வலி ஆகியவற்றால் அவதிப்படுகின்றனர். உங்கள் வீட்டு குழந்தையும் இது போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருந்தால், அதை நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வயிற்றுப் புழுக்களால் குழந்தைக்கு வயிற்று வலி, எரிச்சல் மற்றும் உடல் பலவீனம் ஏற்படலாம்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளிடம் அதிகரித்து வரும் நொறுக்குத் தீனிகள் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட பானங்கள் மீதான மோகம் உடல் பருமனை ஏற்படுத்துவது மட்டுமின்றி, அதை அதிகமாகப் பயன்படுத்துவதால் குழந்தைகளின் வயிற்றில் புழுக்கள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் அதன் தாக்கம் தெரிய ஆரம்பிக்கிறது. வயிற்றுப் புழுக்களை அகற்ற பல மருந்துகள் இருந்தாலும், இதைத் தவிர, பின்வருன போன்ற சில வீட்டு வைத்தியங்களும் உள்ளன. அதை நீங்கள் பின்பற்றலாம். இப்போது அது குறித்து பார்க்கலாம்.
குழந்தைகளின் வயிற்றில் புழுக்கள் இருந்தால், துளசி இலைகளைக் கொண்டு சிகிச்சையளிக்கலாம். வயிற்றுப் புழுக்கள் துளசி இலைகள் அல்லது துளசிச் சாறுகளால் கொல்லப்படுகின்றன. இதனால், வயிற்றில் புழுக்கள் இருந்தால், குழந்தைகளுக்கு துளசி இலையின் சாற்றைக் கொடுக்கவும்.
குழந்தைகளின் வயிற்றில் புழுக்கள் இருந்தால், ஒரு டீஸ்பூன் ஓமம் விதைகளை தண்ணீருடன் விழுங்க வேண்டும். இந்த செயல்முறை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் இருந்தால் தேங்காய் எண்ணெயில் செய்த பொருட்களை சாப்பிட கொடுக்கவும். தேங்காய் எண்ணெய் வயிற்றில் உள்ள புழுக்களையும் நீக்குகிறது.
வயிற்றில் புழுக்கள் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு நான்கைந்து பச்சை பூண்டு பற்களை சாப்பிட கொடுக்கவும்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.