வெயிட் லாஸ் டயட்: புரோட்டீன் நிறைந்த காலை உணவுக்கான யோசனைகள்!!!

Author: Hemalatha Ramkumar
9 November 2024, 6:02 pm

உடல் எடையை குறைப்பதற்கு நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்களில் உணவு ஒன்று. நாம் சாப்பிடும் உணவின் மூலமாக கிடைக்கும் கலோரிகள் நம் உடல் எரிக்கும் கலோரிகளை விட குறைவாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நம்முடைய உடல் எடையை சீரான முறையில் குறைத்து விடலாம். ஆனால் அதே நேரத்தில் நீங்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 

ஆரோக்கியமற்ற முறையில் உடல் எடையை குறைப்பது விரைவான முடிவுகளை அளித்தாலும் அது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. அதுமட்டுமல்லாமல் அதனால் பல்வேறு விதமான பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் நாம் உணவில் கவனம் செலுத்தும் பொழுது ஒரு நாளின் முதல் உணவாக அமையும் காலை உணவில் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காலையில் நாம் சாப்பிடும் உணவு குறைந்த கலோரிகளாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் நமக்கு வயிறு நிரம்பிய உணர்வையும் அளிக்க வேண்டும்.

அப்படி இருக்க உடல் எடையை குறைக்க உதவும் ஒரு காலை உணவு பட்டியலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான அற்புதமான பிரேக்ஃபாஸ்ட் ஆப்ஷன்கள் இந்த பதிவில் உள்ளது. 

டெசர்ட் 

உங்களுடைய காலைகளை ஒரு கிண்ணம் ஃபிரஷான பெர்ரி பழங்கள் அல்லது உங்களுக்கு பிடித்தமான பழங்களோடு ஆரம்பியுங்கள். இதில் தயிர் சேர்த்து கூடுதலாக நட்ஸ் மற்றும் விதைகளை சேர்ப்பது மதிய உணவு வரை உங்களை வயிறு நிரம்பிய உணர்வோடு வைத்திருக்கும். 

இதையும் படிக்கலாமே: கடைகளில் வாங்கும் டொமேட்டோ சாஸில் கலப்படம் இருக்கிறதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது…???

முட்டைகள் 

தக்காளி மற்றும் கீரைகள் சேர்த்து வதக்கி அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி உப்பு, மிளகு தூள் ஆகியவை சேர்த்து சாப்பிடுவது உங்களுக்கு புரோட்டின் நிறைந்த அதே நேரத்தில் நார்ச்சத்து நிறைந்த ஒரு காலை உணவை கொடுக்கும். 

கினோவா 

கினோவாவில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது. மேலும் இது உங்களுடைய காலை உணவை மிகவும் ஊட்டச்சத்து மிக்கதாக மாற்றும். இந்த கினோவாவில் பொடியாக நறுக்கிய அவகாடோ மற்றும் ஒரு கைப்பிடி அளவு நட்ஸ் சேர்த்து சாப்பிடுவது திருப்தியாக அமையும். 

பேன்கேக் 

உங்களுக்கு பேன்கேக் மிகவும் பிடிக்குமா? அப்படி என்றால் அதனை புரோட்டின் பவுடர் மற்றும் ஓட்ஸ் போன்ற ஆரோக்கியமான பொருட்களுடன் செய்து சாப்பிட்டு மகிழுங்கள். பேன் கேக் செய்யும் பொழுது அதில் நீங்கள் பாதாம் பட்டர் சேர்ப்பது அதனை இன்னும் ஆரோக்கியமானதாக மாற்றும். 

ஆரோக்கியமான புட்டிங் 

முதல் நாள் இரவு பால் அல்லது தண்ணீரில் சியா விதைகளை ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த நாள் காலை அதில் பெர்ரி பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை பொடித்து சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்றாக சாப்பிடுவது உங்களுக்கு ஆரோக்கியமான மட்டும் அல்லாமல் ருசியான ஒரு பிரேக்ஃபாஸ்ட்டாக இருக்கும். 

காய்கறிகளுடன் டோஃபு

உங்களுடைய காலை உணவை சைவமாக வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? அப்படி என்றால் உங்களுக்கு பிடித்தமான காய்கறிகளுடன் டோஃபுவை சமைத்து சாப்பிடலாம். இதில் புரோட்டின் சத்து அதிகமாக உள்ளது. மேலும் இன்னும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 159

    0

    0