தூக்கத்தில் பற்களை கடித்து கொள்பவர்களுக்கான சிறந்த தீர்வு!!!
Author: Hemalatha Ramkumar9 April 2022, 6:34 pm
தினமும் காலையில் தாடை வலி அல்லது தலைவலியுடன் எழுகிறீர்களா…? அதற்கான காரணம் நீங்கள் இரவு தூங்கும் போது பற்களை கடித்துக் கொள்வதால் கூட இருக்கலாம். இது ப்ரூக்ஸிஸம் என்று அழைக்கப்படுகிறது. அதனை எப்படி தடுப்பது என்பது குறித்த இந்த பதிவில் பார்ப்போம்.
●காஃபின் மற்றும் ஆல்கஹாலை தவிர்க்கவும்
நீங்கள் எடுக்கக்கூடிய முதல் மிக எளிய நடவடிக்கை உங்கள் உணவை சரிசெய்வதாகும். நாம் சாப்பிடுவது நமது நல்வாழ்வின் அனைத்து அம்சங்களையும் பெரிதும் பாதிக்கிறது – மேலும் பற்களுக்கு இது விதிவிலக்கல்ல.
காஃபின் ஒரு நன்கு அறியப்பட்ட தூண்டுதலாகும். ஆனால் காபி, கோக் மற்றும் எனர்ஜி பானங்களில் அதிக அளவு காஃபின் இருப்பதால் அவற்றைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். நீங்கள் அவற்றை அடிக்கடி குடித்தால், பகலில் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மேலும் உறங்கும் போது ஓய்வெடுப்பது கடினமாக இருக்கும்.
ஆல்கஹாலுக்கும் இதுவே பொருந்தும். ஆனால் அது உங்கள் உடலில் வேறுபட்ட எதிர்வினையை ஏற்படுத்துகிறது. மது உங்கள் உறங்கும் நேரத்தை விரைவுபடுத்தும். ஆனால் அது உங்கள் தூக்கத்தை மேலும் அமைதியற்றதாகவும் ஆழமற்றதாகவும் மாற்றும். இதன் விளைவாக பற்களை கடிப்பது மோசமாகிவிடும்.
●உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தத்தை குறைக்கவும்
ப்ரூக்ஸிஸத்திற்கு மன அழுத்தம் ஒரு பொதுவான காரணம் – இது பகலில் உங்களை பதட்டமாகவும் இரவில் அமைதியற்றதாகவும் ஆக்குகிறது. உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தத்தை கொண்டு வரும் விஷயங்களை நீங்கள் முதலில் சிந்திக்க வேண்டும். பின்னர் அந்த விஷயங்களை எவ்வாறு அகற்றுவது என்பதற்கான பயனுள்ள திட்டத்தைக் கொண்டு வாருங்கள். ஆலோசனை, உடற்பயிற்சி மற்றும் தியானம் இதற்கு உதவலாம்.