உங்க வீட்ல பல்லிகள் அட்டகாசம் அதிகமா இருக்கா… கவலைய விடுங்க… உங்களுக்கான தீர்வு இங்க இருக்கு!!!

Author: Hemalatha Ramkumar
29 August 2022, 4:36 pm

இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பல்லியை காணலாம். சிலருக்கு பல்லி என்றாலே அலர்ஜி. பல்லிகள் அழுக்காகத் தோன்றுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை என்பதையும் நிரூபிக்கலாம். உண்மையில், சால்மோனெல்லா என்ற பாக்டீரியா பல்லிகளின் மலம் மற்றும் உமிழ்நீரில் காணப்படுகிறது. இதன் காரணமாக உணவு விஷம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. பல்லியை வீட்டை விட்டு விரட்ட ஏதாவது வழியை நீங்கள் தேடுகிறீர்களானால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

பல்லிகளை விரட்டுவதற்கான பயனுள்ள வழிகள்-
பெப்பர் ஸ்ப்ரே – பெப்பர் ஸ்ப்ரே பயன்படுத்தினாலும் பல்லிகளை எளிதில் விரட்டலாம். இந்த ஸ்ப்ரேயை தயாரிக்க உங்களுக்கு எந்தவிதமான ரசாயனமும் தேவையில்லை. இதற்கு மிளகுத் தூளை தண்ணீரில் கலந்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி, பல்லிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள வீட்டின் சுவர்களில் தெளிக்கவும். அதன் கடுமையான வாசனை காரணமாக, பல்லி வீட்டிற்குள் வராது.

காபி- பல்லிகளை விரட்ட காபி பொடியையும் பயன்படுத்தலாம். அதைப் பயன்படுத்த, காபித் தூளுடன் புகையிலையைச் சேர்த்து, சிறிய மாத்திரைகளாக உருட்டவும். அதன் பிறகு, பல்லி அதிகமாக வரும் இடத்தில் வைக்கவும்.

பூண்டு மற்றும் வெங்காயம்– ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வெங்காய சாறு மற்றும் தண்ணீரை நிரப்பிய பின், அதில் சில துளிகள் பூண்டு சாறு சேர்த்து நன்றாக குலுக்கவும். பின் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும், பல்லி அதிகமாக வரும் இடங்களில் இதனைத் தெளிக்கவும்.

வெங்காயம்- வெங்காயத்தை துண்டுகளாக வெட்டி நூலால் தொங்கவிட்டால் பல்லியை விரட்டலாம்.
வெங்காயத்தில் அதிக அளவு கந்தகம் இருப்பதால், துர்நாற்றம் வீசுகிறது மற்றும் இதனால் பல்லி வெளியேறுகிறது.

குளிர்ந்த நீர் – குளிர்ந்த நீர் பல்லிகளை வெளியேற்ற உதவும். நீங்கள் பல்லியைக் கண்டால், அதன் மீது குளிர்ந்த நீரை தெளிக்கவும்.

  • Shruti spoke boldly after the leaked video அவர் சொன்னாரு நான் செய்தேன்.. லீக் வீடியோவுக்கு பிறகு போல்டாக பேசிய சிறகடிக்க ஆசை ஸ்ருதி!