டீ , காபி தவிர குளிருக்கு ஏற்ற ஹெல்தி டிரிங்ஸ் நிறைய இருக்கு!!!

Author: Hemalatha Ramkumar
11 January 2025, 4:17 pm

காபி மற்றும் டீ ஆகியவை பிரபலமான காலை பானங்களாக இருந்தாலும் குளிர்காலத்தில் வேறு சில பானங்களை குடிப்பது நம்முடைய ஆரோக்கியத்தில் நம்ப முடியாத அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த பானங்கள் நமக்கு கதகதப்பு தன்மையை தருவது மட்டுமல்லாமல் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கி, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செரிமானத்தை மேம்படுத்தி, உங்களுடைய நாளை சிறப்பாக ஆரம்பிப்பதற்கு தேவையான சீரான ஆற்றலை தருகிறது. இந்த குளிர்ந்த வெப்பநிலைகளில் நாம் போதுமான அளவு ஊட்டச்சத்துக்களை எடுப்பது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிப்பது சளி, காய்ச்சல் போன்ற பொதுவான தொற்றுகளிடமிருந்து நம்மை பாதுகாப்பதற்கு மிகவும் அவசியம்.

எனவே காலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கதகதப்பான பானங்களை பருகுவது நம்முடைய மெட்டபாலிசத்தை அதிகரித்து, செரிமானத்தை மேம்படுத்தி, நமக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கும். அந்த வகையில் உங்களுடைய குளிர்கால காலை வழக்கத்தில் சேர்க்க வேண்டிய 5 சிறந்த பானங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மஞ்சள் பால் 

தங்க பால் என்றும் அழைக்கப்படும் இந்த பானம் பால், மஞ்சள் தூள் மற்றும் ஒரு சிட்டிகை அளவு கருப்பு மிளகு தூள் உடன் தேன் அல்லது நெய் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இது சுவையாக இருப்பதோடு நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தனை நன்மைகளையும் அளிக்கிறது.

இஞ்சி டீ 

இஞ்சி டீ இயற்கையான முறையில் செரிமானத்தை தூண்டி, இறுக்கமான தசைகளுக்கு நிவாரணம் தந்து, உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

மசாலா டீ 

மசாலா டீ என்பது வாசனை நிறைந்த மசாலாக்களை சேர்த்து செய்யப்படும் ஒரு அற்புதமான பானம். குளிரான காலையில் துவங்குவதற்கு இது சிறந்த ஒரு பானமாக அமைகிறது. இதில் ஏலக்காய், கிராம்பு, பட்டை, கருப்பு மிளகு மற்றும் சுக்கு போன்ற மசாலா பொருட்கள் சேர்க்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: நைட்ல வாழைப்பழம் சாப்பிடுறது அவ்வளோ பெரிய தப்பா என்ன…???

எலுமிச்சை டீ 

காலை வெறும் வயிற்றில் எலுமிச்சை தேநீரை வெதுவெதுப்பான நிலையில் பருகுவது கல்லீரலின் நச்சுநீக்க செயல்முறைக்கு உதவி, நம்முடைய உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை திறமையாக அகற்றுகிறது. அதே நேரத்தில் இது செரிமானத்தை ஊக்குவித்து, நாள் முழுவதும் நம்மை புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது.

ஆப்பிள் சைடர் வினிகர் 

இந்த புளிப்பான பானம் வயிற்று உப்புசத்தை குறைத்து, இரத்த சர்க்கரை அளவுகளை சீராக்கி, சரும ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. காலை எழுந்ததும் இந்த பானத்தை முதலில் குடிப்பது நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி, செரிமானத்தை ஊக்குவித்து, நம்முடைய நாளை ஆரோக்கியமான முறையில் துவங்குவதற்கு ஒரு சிறந்த ஆப்ஷனாக இருக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Ajith race team celebration video நீங்க அவரை கவனிச்சீங்களா…துபாய் கார் ரேஸில் நடனம் ஆடிய அஜித் பட இயக்குனர்…!
  • Leave a Reply