நுரையீரலின் செயல்பாடுகளை மேம்படுத்தி உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதற்கான விரைவான மற்றும் எளிமையான வழி உங்களுடைய அன்றாட வழக்கத்தில் ஒரு சில டீடாக்ஸ் பானங்களை சேர்ப்பதாகும். சுற்றுச்சூழல் மாசுபடுத்திகளுக்கு எதிராக போராடவும், சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நீங்கள் டீடாக்ஸ் பானங்களை பருகலாம். இந்த பானங்கள் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு உதவி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலில் இருந்து நச்சுப் பொருட்களை அகற்றுகிறது.
டீடாக்ஸ் பானங்களில் காணப்படும் அத்தியாவசிய மினரல்கள் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள் நம்முடைய சுவாச ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானவை. அதிலும் குறிப்பாக அலர்ஜி, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த பானங்களை குடிப்பது, அதனால் ஏற்படும் அறிகுறிகளிலிருந்து விடுபட உதவும். எனவே உங்களுடைய அன்றாட டயட்டில் ஆரோக்கியமான நுரையீரலுக்கான 5 டீடாக்ஸ் பானங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
எலுமிச்சை மற்றும் இஞ்சி டீ
எலுமிச்சை மற்றும் இஞ்சி ஆகிய இரண்டும் வீக்கத்தை குறைத்து, சளியை தளர்த்தி, தொற்றுகளை தடுப்பதன் மூலமாக நுரையீரல்களை சுத்தம் செய்ய உதவுவன. எலுமிச்சையில் காணப்படும் வைட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இஞ்சியில் உள்ள வீக்க எதிர்ப்பு பண்பு நுரையீரலை சுற்றுச்சூழல் மாசுபடுத்திகளிடமிருந்து பாதுகாக்கிறது.
மஞ்சள் பால்
மஞ்சள் பால் என்பது நம்முடைய நுரையீரல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கக்கூடிய ஒரு வலிமையான டீடாக்ஸ் பானம். மஞ்சளில் காணப்படும் குர்குமின் என்ற பொருள் தொற்று ஏற்படுவதை தடுத்து, நுரையீரலில் சளி தாங்காமல் பார்த்துக் கொள்கிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் அகற்றுவதற்கு உதவுகிறது.
இதையும் படிச்சு பாருங்க: வின்டர் வந்தா பொடுகு தொல்லை தாங்க முடியலன்னு கவலைப்படும் நபர்களுக்காகவே இந்த பதிவு!!!
புதினா மற்றும் தேன்
புதினா இலையில் காணப்படும் மென்தால் சுவாச பாதைகளை விரிவடைய செய்து, சுவாசிக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது. மேலும் தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் புதினாவோடு இணைந்து தொண்டைப்புண் மற்றும் வலியை ஆற்றுகிறது.
ஆப்பிள் சைடர் வினிகர்
நுரையீரலை டீடாக்ஸ் செய்வதற்கு ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு சிறந்த ஆப்ஷன். ஏனெனில் இது உடலில் உள்ள நச்சுகளை அகற்றி pH அளவை சமநிலையாக்குகிறது. இது சுவாச பாதையை மேம்படுத்தி, மூக்கடைப்பை குறைத்து, நுரையீரலில் உள்ள சளியை வெளியேற்றுகிறது.
பீட்ரூட் மற்றும் கேரட் ஜூஸ்
வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த கேரட் மற்றும் பீட்ரூட் நுரையீரலை சுத்தம் செய்வதற்கு உதவுகிறது. பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலமாக நுரையீரல்களுக்கு ஆக்ஸிஜன் எளிதில் கிடைப்பதை உறுதி செய்கிறது. மேலும் கேரட்டுகளில் காணப்படும் பீட்டா கரோட்டின் நச்சுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுத்திகளுக்கு எதிராக நுரையீரலை பாதுகாக்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில்…
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
This website uses cookies.