மாதவிடாய் காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!
Author: Hemalatha Ramkumar14 May 2022, 10:22 am
உங்கள் மாதவிடாய் சுழற்சியின் போதும் அதற்கு முந்தைய நாட்களிலும் சாப்பிடப்படும் உணவு, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை தீர்மானிக்க முடியும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மாதவிடாய் காலத்தில் லேசான அசௌகரியமும் வலியும் ஏற்படுவது இயல்பானது. ஆனால் ஆரோக்கியமான உணவு உண்பது உங்களுக்கு வசதியான அனுபவத்தையும் உங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்தையும் பெறுவதை உறுதிசெய்யும்.
மாதவிடாய் காலத்தில் ஒருவர் உணவில் சேர்க்க வேண்டிய ஐந்து உணவுப் பொருட்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
* தயிர், ஏனெனில் இது கால்சியம் மற்றும் புரதத்தின் சிறந்த மூலமாகும். இது உங்கள் தசைகளை தளர்த்தி, மாதவிடாய் முன் நோய்க்குறியைக் குறைக்கும். நீங்கள் ஒரு கிளாஸ் மோர் அல்லது ஒரு தயிர் கிண்ணம், கொட்டைகள் மற்றும் பழங்களுடன் சாப்பிடலாம்.
* ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த கொட்டைகள் மற்றும் விதைகளை சாப்பிடுங்கள். அவை மாதவிடாய் காலத்தில் உங்கள் பசியைக் கட்டுப்படுத்த உதவும்.
* வாழைப்பழங்கள் பொட்டாசியத்தின் சிறந்த ஆதாரங்கள் மற்றும் வைட்டமின் பி 6 கொண்டவை. இது மாதவிடாய் காலத்தில் உங்கள் மனநிலையை மேம்படுத்தும்.
* போதுமான தண்ணீர், இளநீர், காய்கறி சாறு அல்லது மோர் குடிப்பதன் மூலம் உங்களை ஹைட்ரேட் செய்யுங்கள். இது நீரிழப்பு காரணமாக ஏற்படும் தலைவலி அபாயத்தைக் குறைக்கிறது.
* பருப்பு சாப்பிடுங்கள், அவற்றில் இரும்பு மற்றும் துத்தநாகம் நிறைந்திருப்பதால், வலிமிகுந்த மாதவிடாய் கால பிடிப்பைக் குறைக்கும்.