இந்த பொடிய தினமும் சாப்பிட்டு வந்தா உடம்புல கொலஸ்ட்ரால் சேராது தெரியுமா…???

Author: Hemalatha Ramkumar
17 December 2022, 10:41 am

சமீப காலங்களில், வயதினைக் கருத்தில் கொள்ளாமல் கொலஸ்ட்ரால் பிரச்சினை பலரையும் வாட்டி வதைத்து வருகிறது. மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் உடலுக்கு எந்த ஒரு வேலையும் கொடுக்காமல் இருப்பது ஆகியவை உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு பிரச்சனைக்கு வழிவகுக்கும். கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது இதயத் தடுப்பு உட்பட பல கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும்.

நிறைய பேர் தங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த தினசரி மருந்துகளை நாட வேண்டியுள்ளது. இருப்பினும், விலையுயர்ந்த மருந்துகளை சாப்பிடுவதால் பல பக்க விளைவுகள் உண்டாகலாம். ஆகவே பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்தியத்தை பின்பற்றுவதே சிறந்தது.

இந்த ஆயுர்வேத தீர்வு எளிமையானது மற்றும் இதனை செய்வதற்கு உங்களுக்கு பெரிதாக செலவாகாது. இதற்கு சிறிது ஆளி விதையை எடுத்து மிக்ஸியில் பொடி செய்து, பொடியை ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைக்கவும். இந்தப் பொடியை வெதுவெதுப்பான நீரில் தினமும் உட்கொள்ள வேண்டும் மற்றும் வெறும் வயிற்றில் ஒன்று முதல் இரண்டு ஸ்பூன் அளவு போதுமானது. இது உங்கள் உடலில் நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்கவும், கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) அளவைக் குறைக்கவும் உதவுகிறது.

ஆளிவிதை சத்துக்களின் பொக்கிஷம். இதன் விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள், மெக்னீசியம் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆளிவிதை சைவ உணவு உண்பவர்களுக்கு ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தாலும் கூட, இதனை சாப்பிடலாம். இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு, நோய்களையும் தடுக்கிறது.

ஆயுர்வேதத்தில், கொலஸ்ட்ரால் சிகிச்சையில் ஆளிவிதை ஒரு சஞ்சீவியாக கருதப்படுகிறது. இதய ஆரோக்கியத்தை பலப்படுத்த இதை சாப்பிடலாம். கூடுதலாக, நீங்கள் ஆளி விதையை ஒரு தூளாக அரைத்து உங்கள் சாலட்டில் சேர்க்கலாம். எந்த விதமான எதிர்மறையான விளைவுகளையும் சந்திக்காமல் நீண்ட காலத்திற்கு நீங்கள் இதை உட்கொள்ளலாம்.

  • good bad ugly movie collected 200 crores in 9 days ஒன்பதே நாள்ல வேற லெவல் கலெக்சன்; AKனா சும்மாவா? குட் பேட் அக்லி கல்லா கட்டிய விவரம்…