படுத்த ஐந்து நிமிடங்களில் தூங்குவது எப்படி… உங்களுக்கான அசத்தல் டிப்ஸ்!!!
Author: Hemalatha Ramkumar18 April 2023, 2:24 pm
இரவு நேரத்தில் தூக்கத்தை வரவழைப்பது இன்று பலருக்கு ஒரு பணியாகவே மாறிவிட்டது. என்ன தான் புரண்டு புரண்டு படுத்தாலும், ஒரு சிலரால் தூங்க முடிவதில்லை. ஆழ்ந்த, நிம்மதியான மற்றும் அமைதியான தூக்கம் ஒருவரை அடுத்த நாளுக்கு தயார் செய்ய ஊக்குவிக்கிறது. மேலும் உடலில் இருந்து சோம்பலை நீக்குகிறது. இந்த பிரச்சினையால் நீங்களும் அவதிப்பட்டு வருகிறீர்கள் என்றால், விரைவாக தூங்க உதவும் ஒரு சில டிப்ஸ் இதோ உங்களுக்காக:-
வீக்கெண்டு உட்பட எல்லா நாளும், ஒரே நேரத்தில் படுக்கைக்கு சென்று, ஒரே நேரத்தில் எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த நேரம் வரும்போது, இயல்பாகவே உங்களுக்கு தூக்கம் வந்துவிடும்.
தூங்குவதற்கு ஒரு வசதியான மற்றும் நிதானமான சூழலை உருவாக்கவும். ஒரு வசதியான மெத்தை, தலையணைகள் மற்றும் படுக்கை ஆகியவை சிறந்த தூக்க சூழலுக்கு பங்களிக்கும். கூடுதலாக, வெளிச்சம் வருவதைத் தடுக்க பிளாக்அவுட் திரைச்சீலைகளைப் பயன்படுத்தவும் மற்றும் அறையின் வெப்பநிலையை குளுமையாக வைக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் மன அழுத்தம் குறைந்து நல்ல தூக்கம் கிடைக்கும்.
காஃபின் கலந்த பானங்களைத் தவிர்ப்பது, தூக்கமின்மை மற்றும் இரவு நேரத்தில் உங்கள் தூக்கத்தை மேம்படுத்த உதவும். காஃபின் ஒரு தூண்டுதலாகும். இது உங்களை விழிப்புடன் வைத்திருக்கும். மேலும் அதன் விளைவுகள் பல மணிநேரம் நீடிக்கும். ஆகவே தூங்குவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு காஃபின் பானங்களைத் தவிர்க்கவும்.
பகல் நேரத்தில் தூங்குவதைத் தவிர்க்கவும். அப்படி தூங்கினால் அரை மணி நேரத்திற்கு மேல் தூங்க வேண்டாம். ஏனெனில், அவ்வாறு செய்வது உங்கள் இரவு நேர தூக்கத்தை பாதிக்கும்.
இரவில் மொபைல், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தூக்கத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, நிபுணர்கள் படுக்கைக்கு முன் குறைந்தது 30 நிமிடங்களுக்கு செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைத் தவிர்க்க பரிந்துரைக்கின்றனர். இதனால் இயற்கையாகவே உங்கள் உடல் உறங்குவதற்குத் தயாராகிறது. கூடுதலாக, செல்போன்களை படுக்கையறைக்கு வெளியே வைத்திருப்பது, தூக்கத்திற்கு ஏற்ற சூழலை அமைக்க உதவும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
0
0