இயற்கையான முறையில் மாதவிடாயை முன்கூட்டியே வரவழைக்க உதவும் உணவுப் பொருட்கள்!!!

Author: Hemalatha Ramkumar
23 November 2022, 3:38 pm

ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதவிடாய் என்றாலே பெரிய தலைவலி தான். வலியுடன் கூட அந்த சோர்வான நாட்களை யார் தான் விரும்புவார்? ஒரு சில காரணங்களுக்காக மாதவிடாய் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ வர வேண்டும் என்று நாம் நினைப்பதுண்டு. இதற்காக மெடிக்கல்களில் மருந்துகள் கூட கிடைக்கிறது. உங்கள் ஆரோக்கியத்தில் பாதகமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இருப்பினும் மாதவிடாயை முன்கூட்டியே வரவழைக்க உதவும் சில பயனுள்ள பக்க விளைவுகள் இல்லாத இயற்கை வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

பப்பாளி:
பப்பாளி பாரம்பரியமாக மாதவிடாயைத் தூண்டுவதற்கு பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கருப்பை மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனில் சுருக்கத்தைத் தூண்டுகிறது. இதன் மூலம் மாதவிடாயை முன்கூட்டியேத் தூண்டுகிறது. இதை பச்சையாகவோ அல்லது சாறு வடிவிலோ ஒரு நாளைக்கு இரண்டு முறை உட்கொள்ளலாம்.

எள்:
உங்கள் மாதாந்திர சுழற்சியை முன்னெடுப்பதற்கு எள் உங்களுக்கு உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு டீஸ்பூன் தேனுடன் ஒரு டீஸ்பூன் எள்ளுடன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிடுங்கள். நீங்கள் எதிர்பார்த்த தேதிக்கு 6 நாட்களுக்கு முன்பு இதை முயற்சி செய்யலாம்.

பெருஞ்சீரகம் விதைகள்:
தினமும் காலையில் சோம்பு டீ உட்கொள்வது உங்கள் மாதவிடாயை சீராக்கும். இந்த தேநீர் ஆரோக்கியமான ஓட்டத்தையும் ஊக்குவிக்கிறது. பெருஞ்சீரகம் தேநீர் தயாரிக்க, 2 டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து பருகவும்.

பூசணி விதைகள்:
பூசணி விதைகள் பல நூற்றாண்டுகளாக மாதவிடாயைத் தூண்டுவதற்கு பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விதைகளை ஒரு கைப்பிடி அளவு ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் வருவதைத் தூண்டும்.

பேரீச்சம் பழங்கள்:
பேரீச்சம்பழங்கள் உடலில் வெப்பத்தை உருவாக்குவதாக அறியப்படுகிறது..இது உங்கள் மாதவிடாய் சுழற்சியைத் தூண்டும்.

வெல்லம்:
வெல்லம் மாதவிடாய் ஓட்டத்தைத் தூண்டும் சக்தி வாய்ந்த பொருட்களில் ஒன்றாகும். எள்ளுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடுங்கள் அல்லது வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் இஞ்சி சாறு சேர்த்து குடித்தால் மாதவிடாய் ஏற்படும்.

மஞ்சள்:
கொதிக்கும் நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, உங்கள் மாதவிடாய் ஏற்படுவதற்கு 15 நாட்களுக்கு முன் ஒரு நாளைக்கு இரண்டு முறை என உட்கொள்ளுங்கள்.

*குறிப்பு: நீங்கள் ஏதேனும் உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த பதிவில் பட்டியலிடப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் உங்கள் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும். எனவே, இந்த வைத்தியங்களைப் பின்பற்றுவதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது நல்லது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 520

    1

    0