இந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதற்கு முன் தண்ணீரில் ஊற வைத்து தான் சாப்பிட வேண்டும்… தெரிஞ்சுக்கோங்க!!!

Author: Hemalatha Ramkumar
2 May 2023, 10:21 am

சில உணவுகளின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கவும், அவற்றில் உள்ள வெப்பத்தை குறைக்கவும், அவற்றை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவது நல்லது. இது வயிற்றை பல்வேறு பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்து உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும். எந்தெந்த உணவுகளை உட்கொள்வதற்கு முன் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.

வெந்தய விதைகளை தண்ணீரில் ஊறவைப்பது அவற்றின் நார்ச்சத்தை அதிகரிக்கிறது மற்றும் அவற்றின் பண்புகளை மேம்படுத்துகிறது. மேலும், தண்ணீரில் ஊற வைத்த பிறகு, இதனை ஜீரணிக்க எளிதாகிறது. மேலும் நமது செரிமான அமைப்பும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆளிவிதை மற்றும் பாதாம் பருப்பில் இருந்து வெளிவரும் டானின் என்ற கலவையைத் தவிர்க்க, இரண்டையும் ஊறவைத்து சாப்பிடுங்கள். இது தவிர, இவை இரண்டையும் ஊறவைத்து சாப்பிடுவதால் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கும்.

தண்ணீரில் ஊறவைத்த மாம்பழத்தை சாப்பிடுவது அதன் வெப்பத்தை குறைக்க உதவும். மேலும் மாம்பழத்தில் உள்ள சூடு காரணமாக சிலருக்கு சொறி, தோலில் தொற்று ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அவற்றை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம், இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

தண்ணீரில் ஊறவைத்த திராட்சையை உட்கொள்வது உடலில் இரும்புச் சத்தை அதிகரிக்க உதவும். இதைச் செய்வதன் மூலம், திராட்சையில் உள்ள நார்ச்சத்து அதிகரிக்கிறது. இது மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. எனவே, இந்த உணவுப் பொருட்களை ஊறவைத்து உண்ணுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?