இத சாப்பிட்டா ஸ்ட்ரெஸ் அதிகரிக்க வாய்ப்பு இருக்கு!!!

Author: Hemalatha Ramkumar
13 March 2023, 10:00 am

நீங்கள் சாப்பிடும் உணவானது உங்கள் உடலின் மன அழுத்தத்தை பாதிக்கலாம். உணவு மனித உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. நாம் உண்ணும் உணவுகள் உடலை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க ரசாயன பொருட்களைப் போல செயல்படுகின்றன. அந்த வகையில், உடலில் மன அழுத்தத்தைத் தூண்டும் மோசமான உணவுகள் உள்ளன. அவை என்ன மாதிரியான உணவுகள் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

சர்க்கரை
அதிக சர்க்கரை சாப்பிடுவது குளுக்கோஸ் அதிகரிக்க வழிவகுக்கிறது. இது ஒரு நபரின் மனநிலையை நேரடியாக பாதிக்கிறது. இதனால் உங்கள் கவலை அளவுகள் அதிகரிக்கும்.

காஃபின்
காஃபின் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோனான உடலில் கார்டிசோலின் அளவை உயர்த்தும் என்பதால், பதட்டத்திற்கு ஒரு பங்களிப்பாளராகிறது. எனவே, அதிக அளவு காஃபின் உட்கொள்வது நாள்பட்ட மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இருப்பினும், சரியாக உட்கொள்ளும் போது அது ஒரு நபரின் மனநிலையை மேம்படுத்தும்.

வறுத்த உணவு
வறுத்த உணவை அதிகமாக உட்கொள்வதால் வீக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வறுத்த உணவில் அதிக அளவு டிரான்ஸ் கொழுப்பு உள்ளது. உங்கள் உடலில் வீக்கத்திற்கு டிரான்ஸ் கொழுப்பு ஒரு முக்கிய காரணம். உங்கள் உடல் அழற்சியின் நிலைக்குச் செல்லும்போது, உங்கள் மன அழுத்த அளவுகள் அதிகரிக்கின்றன.

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்
உடல் செயல்படுவதற்கான முதன்மை எரிபொருளான கார்போஹைட்ரேட்டுகளை உடைப்பதன் மூலம் உடல் குளுக்கோஸ் அல்லது சர்க்கரையைப் பெறுகிறது. கார்போஹைட்ரேட் சுத்திகரிக்கப்படும் போது அது சர்க்கரை உற்பத்தியை அதிகரிக்கிறது. இது மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற அறிகுறிகளைத் தூண்டுகிறது.

செயற்கை இனிப்புகள்
சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, செயற்கை இனிப்பு மற்றும் அஸ்பார்டேம் இடையே உள்ள தொடர்பைக் கண்டறிந்தது. ஒருமுறை உட்கொள்ளும்போது, செயற்கை இனிப்பு உடைந்து மெத்தனால், அஸ்பார்டிக் அமிலம் மற்றும் ஃபைனிலாலனைன் ஆகிய மூன்று இரசாயனங்கள் உருவாகிறது. இவை அனைத்தும் மத்திய நரம்பு மண்டலத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ
  • Close menu