தப்பித்தவறி கூட இரவு நேரங்களில் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க…!!!

Author: Hemalatha Ramkumar
3 September 2022, 6:03 pm

இரவில் தூங்கும் முன் ஏதாவது சாப்பிடும் பழக்கம் பலரிடம் உள்ளது. சில சமயம் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுவிட்டு சிலர் தூங்குவார்கள், சில சமயம் சிலர் பழங்களை சாப்பிட்டுவிட்டு தூங்குவார்கள். சிந்திக்காமல் நாம் தூங்கும் முன் எதையும் உட்கொள்கின்றோம். கொழுப்பு நிறைந்த எண்ணெய் உணவுகளை சாப்பிடுவது மிகவும் மோசமானது. குறிப்பாக இரவு நேரத்தில் இவற்றை சாப்பிடவே கூடாது. ஏனெனில் அது உங்கள் செரிமானத்தை கெடுக்கும். இனி வரும் நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள தூங்கும் முன் என்னென்ன உணவுகளை உட்கொள்ளக் கூடாது என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

இரவில் தூங்கும் முன் எலுமிச்சை, ஆரஞ்சு அல்லது சிட்ரஸ் பழங்களை உட்கொள்வதை தவிர்க்கவும். ஏனெனில் இது உங்களுக்கு அஜீரணம், வாயு பிரச்சனையை தரக்கூடியது. மேலும் நீங்கள் நோய்வாய்ப்படலாம்.

தூங்கும் முன் டார்க் சாக்லேட் சாப்பிட வேண்டாம். டார்க் சாக்லேட் உட்கொள்வதன் மூலம், உங்கள் மனம் சுறுசுறுப்பாக மாறும். இது தூங்குவதில் சிக்கலை ஏற்படுத்தும்.

இரவில் தூங்கும் முன் காரமான உணவுகளை சாப்பிட வேண்டாம். அதிக காரமான உணவுகளை சாப்பிடுவது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனுடன் அதிக காரமான உணவுகளை உண்பதால் உடலில் வெப்பம் உண்டாகிறது.

இரவு உணவில் தக்காளியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இரவில் தக்காளி சாப்பிடுவதால், வாயு அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படலாம். இதன் காரணமாக, இரவில் தக்காளி சாப்பிட வேண்டாம்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!