ஹார்மோன் பிரச்சினைகளை தடுக்க கோடை காலத்தில் நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

Author: Hemalatha Ramkumar
27 April 2023, 5:06 pm

அதிகரித்து வரும் நமது மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை காரணமாக பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நமது உணவு உண்ணும் பழக்கம் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். சரியான ஹார்மோன் சமநிலையை பராமரிப்பது ஆரோக்கியமான உடலுக்கு மிகவும் அவசியம்.

ஹார்மோன் சமநிலை இல்லாமல் இருப்பது பிசிஓஎஸ், ஹைபோ தைராய்டிசம், ஹைப்பர் தைராய்டிசம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். நாம் உணவு உண்ணும் பழக்கத்தை சரிவர செய்யாமல் இருக்கும் பொழுது தேவையற்ற உடல் எடை அதிகரிப்பு, சரும பிரச்சனைகள் அல்லது உணர்வு மாற்றங்கள் போன்றவை ஏற்படும். கோடை காலத்தில் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுவது அதிகம். நம் ஹார்மோன்களை சம நிலையில் வைப்பதற்கு கோடைகாலத்தில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

சோயா
சோயாவில் காணப்படக்கூடிய ஃபோட்டோ ஈஸ்ட்ரோஜன் நமது உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் போலவே செயல்படக்கூடிய ஒன்றாகும். இதன் காரணமாக கருமுட்டை வெளியிடும் செயல்பாட்டில் சிக்கல் ஏற்படலாம். ஆகவே சோயா பால், சோயா தொடர்பான உணவுகளை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்
பால் சார்ந்த பொருட்கள் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தக்கூடும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களானது செரிமான குழாயில் வீக்கத்தை ஏற்படுத்தி ஹார்மோன்களுடன் வினை புரியும். பாலை அதிக அளவில் சாப்பிடுவது நீரழிவு நோயை கூட ஏற்படுத்தலாம்.

சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை சாப்பிடுவது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவுகளை அதிகரிக்கச் செய்யும் இதனால் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கிறது. ஆகவே சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

சர்க்கரை அல்லது செயற்கை இனிப்பான்கள் செயற்கை இனிப்பான்கள் செரிமான அமைப்பில் உள்ள பாக்டீரியாக்களை தாக்குவதன் மூலமாக ஹார்மோன் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே பிஸ்கட், கேக் சாக்லேட் போன்ற சர்க்கரை நிறைந்த தின்பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும். அதற்கு பதிலாக வெல்லம் போன்ற ஆரோக்கியமான இயற்கை இனிப்பான்களை பயன்படுத்தலாம்.

காபின்
காபி, டீ, மதுபானங்கள் போன்றவை தூக்க சுழற்சியில் தலையிட கூடும். இது ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும். ஆகவே உங்களுக்கு ஹார்மோன் சமநிலையில் பிரச்சனை இருக்கும் பட்சத்தில் காபின் கலந்த பானங்களை முடிந்த அளவு தவிர்த்து விடவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Vidamuyarchi record-breaking release ரிலீசுக்கு முன்னே வரலாற்று சாதனை படைக்குமா ‘விடாமுயற்சி’…ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு..!