பிரக்னன்சி டைம்ல உங்க மனைவிக்கு மறந்து கூட இதெல்லாம் சாப்பிட கொடுக்காதீங்க!!!
Author: Hemalatha Ramkumar15 May 2023, 1:53 pm
கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம். இந்த கட்டத்தில், நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே, உங்கள் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
அமினோரியா மற்றும் மாதவிடாய்க்கு முந்தைய கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான சிறந்த உணவாக கத்திரிக்காய் கருதப்படுகிறது. எனினும், கர்ப்ப காலத்தில் கத்திரிக்காய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
எப்பொழுதும் பாலை குடிக்கும் முன் அதனை கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்க வைத்த பால் அனைத்து கிருமிகளையும் கொன்று, நோய்கள், நுண்ணுயிர் தொற்று ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. ஏனெனில் இத்தகைய தொற்றுகள் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
கருக்கலைப்பைத் தூண்டுவதற்கு ஆரம்ப காலத்தில் எள் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. எள் விதைகள் கருப்பை தசைகளை தூண்டி கருவுற்ற கருமுட்டையை வெளியேற்றும். ஆகவே கர்ப்பிணி பெண்கள் எள் சாப்பிடக்கூடாது.
பப்பாளி கருக்கலைப்பைத் தூண்டும். எனவே, கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது. பச்சை பப்பாளியில் காணப்படும் பாப்பைன் கருப்பைச் சுருக்கங்களுக்கு காரணமாகும். இந்த இரசாயனம் கருவின் வளர்ச்சியை கடுமையாக கட்டுப்படுத்துகிறது.
அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமைலைன் கருப்பை வாயை மென்மையாக்கும். இந்த இரசாயனம் கருக்கலைப்பை ஏற்படுத்தும் கருப்பை வாயைத் திறக்க வழிவகுக்கும். அன்னாசிப்பழம் உடல் வெப்பநிலையை வேகமாக அதிகரிக்கச் செய்யும் என்றும், இது இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தி, கருக்கலைப்பு அல்லது குழந்தை முன்கூட்டிய பிறப்பு காரணமாகலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.