இரத்த சோகையை போக்க உதவும் 10 உணவுகள்!

Author: Hemalatha Ramkumar
4 March 2023, 7:25 pm

இரத்த சோகை என்பது நம் உடலில் உள்ள ஹீமோகுளோபினின் எண்ணிக்கை குறைவதால் ஏற்படும் ஒரு விதமான பிரச்சனை ஆகும். ஹீமோகுளோபின் குறைவதால் ஆக்சிஜன் வழங்கும் திறம் குறைந்து ஒருவர் மிகவும் சோர்வடைந்து விடுவார். இது அவரை பலவீனம் அடையச் செய்து விடும். ஆனால், இரத்த சோகையை நம்மால் சில உணவுகள் மூலம் சரி செய்ய முடியும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கக் கூடிய ஒரு சில உணவுகள்  உள்ளன. அதனை நாம் உண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் அதிகரித்து நம்மால் நலமுடன் வாழ முடியும். 

  • இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் அதிகரிக்கக் கூடிய உணவுகளின் பட்டியலில் முதலில் இருப்பது பேரிச்சம் பழம் ஆகும். இதனை அப்படியே, அல்லது பாலில் போட்டும் சாப்பிடலாம்.
  • அடுத்து மாதுளைப்பழம். இதுவும் இரத்த சோகைக்கான சிறந்த உணவாகும். தினமும் ஒரு மாதுளைப் பழத்தை உதிர்த்து அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது. அல்லது அதனை வைத்து ஜுஸ் போட்டு கூட குடிக்கலாம்.  
  • முருங்கைக் கீரை இலைகளை வைத்து சூப் செய்து அல்லது முருங்கைக் கீரையைக் கடைந்து சாப்பிடலாம். 
  • பீட்ரூட் பொரியல், பீட்ரூட் ஜுஸ் அல்லது சேலட் போன்றவை இதற்கு உதவியாக இருக்கும்.
  • உலர்ந்த கருப்பு திராட்சை, ஆரஞ்சு பழம், நெல்லிக்காய், உலர்ந்த அத்திப் பழம், உலர்ந்த பாதாமி பழம் போன்றவை கூட இரத்த சிவப்பணுக்களை அதிகரிப்பதற்கான உணவுகள் ஆகும்.
  • ஆட்டு ஈரல் மற்றும் ஆட்டு சுவரொட்டி ஆகிய இரண்டுமே ஹீமோகுளோபின் அளவுகளை அதிகரிக்க உதவும்.

இவை அனைத்துமே நம் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரித்து இரத்த் சோகையைப் போக்க உதவும். இவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு பயன் அடையுங்கள்.

  • Vetrimaaran Viduthalai controversy A சான்றிதழ் கொடுத்தும் வசனங்கள் MUTE ஏன்? சரமாரியாக கேள்வி கேட்ட பிரபலம்…!
  • Views: - 603

    0

    0