உடற்பயிற்சி செய்த பிறகு சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன???

Author: Hemalatha Ramkumar
2 January 2023, 9:36 am

உடல் ரீதியாக உடற்பயிற்சிக்கு பிறகு நீங்கள் மிகவும் சோர்வாக உணரலாம். ஆகையால் இப்போதுதான் நீங்கள் முன்பை விட அதிக கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சி என்பது உடற்தகுதியின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இருந்தாலும், ஒரு தீவிரமான உடற்பயிற்சியை முடித்த பிறகு, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துவது முதன்மையானது. உங்கள் வொர்க்அவுட்டிற்குப் பிறகு தசைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு சில சிறந்த உணவுகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

மீன் மற்றும் கோழிக்கறி:
மீன் மற்றும் கோழி போன்ற ஒல்லியான இறைச்சியில் புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி12, நியாசின், துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் தசைகள், எலும்புகள் மற்றும் குருத்தெலும்புகளின் கட்டுமான தொகுதி ஆகும். மெலிந்த தசைகளை சரிசெய்ய உதவுவதோடு, அவை உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாகக் கருதப்படுகின்றன.

அடர்ந்த இலை கீரைகள்:
பெரும்பாலான கருமையான இலை காய்கறிகளில் அதிக அளவு நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் வலிமை மற்றும் சுறுசுறுப்பை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன. அவை வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் அதே வேளையில் தசை வலிமையை சரிசெய்யவும் மீட்டெடுக்கவும் உதவுகின்றன.

இந்த காய்கறிகளில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவற்றில் மிகக் குறைந்த கார்போஹைட்ரேட், சோடியம் மற்றும் கொலஸ்ட்ரால் இருப்பதால், அவை இதயத்தை ஆரோக்கியமாக்குகின்றன.

அவகேடோ:
கீட்டோ டயட் அல்லது குறைந்த கார்ப் டயட்டில் இருப்பவர்கள் அவகேடோவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளுடன் ஆரோக்கியமான கொழுப்புகளின் உயர் மட்டத்தைக் கொண்டுள்ளது. இது வொர்க்அவுட்டிற்குப் பிறகு தசைப்பிடிப்பைக் குறைக்கவும் தசைச் சுருக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

நட்ஸ்கள் மற்றும் விதைகள்:
அதிக அளவு புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், நட்ஸ்கள் மற்றும் விதைகளில் காணப்படுகின்றன. அவை உங்கள் உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் சிறந்தவை மற்றும் புரதம் நிறைந்த உள்ளடக்கம் எலும்புகள், தசைகள் மற்றும் தோலை உருவாக்க உதவுகிறது. இது வொர்க்அவுட்டிற்கு பிறகு சாப்பிட வேண்டிய ஒரு சிறந்த சிற்றுண்டியாக அமைகிறது.

  • Vidamuyarchi record-breaking release ரிலீசுக்கு முன்னே வரலாற்று சாதனை படைக்குமா ‘விடாமுயற்சி’…ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு..!