நம்மில் பெரும்பாலோர் உடல் எடையை எப்படி குறைப்பது என்பதற்கான வழிகளை எப்போதும் தேடிக் கொண்டே இருக்கிறோம். உடல் எடையை குறைப்பது ஒரு மேஜிக் அல்ல. நாம் உட்கொள்வதை விட அதிக கலோரிகளை எரிக்கும்போது மட்டுமே உடல் எடையை குறைக்க உதவும். இப்போது உடல் எடையை குறைக்க உதவும் சில உணவுகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பச்சை பயறு புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகிய சத்துக்களை அதிகமாக கொண்டுள்ளது. இது கோலிசிஸ்டோகினின் எனப்படும் மனநிறைவு ஹார்மோன் சுரக்க உதவி புரிகிறது. இது நீங்கள் நீண்ட நேரம் முழுதாக இருக்க உதவுகிறது. இதில் உள்ள புரதத்தின் தெர்மிக் விளைவு, தொப்பையை குறைக்கும் ஒரு சூப்பர்ஃபுட் ஆகும்.
குறைந்த கலோரி பானமான மோர் எடை குறைக்க உதவும். கூடுதலாக, இது மனநிறைவை மேம்படுத்தவும், பசியைக் குறைக்கவும் உதவுகிறது.
சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இது எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
ராகியை உணவில் சேர்த்துக் கொள்வது நமது ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ராகியில் மெத்தியோனைன் என்ற அத்தியாவசிய அமினோ அமிலம் உள்ளது. இது அதிகப்படியான கொழுப்பை அகற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
காலிஃபிளவரில் அதிக நார்ச்சத்து உள்ளது மற்றும் போதுமான அளவு புரதம் உள்ளது. புரதம், நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி ஆகியவை எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.