நெய் கூட இதெல்லாம் சாப்பிட்டா அவ்ளோ தான்… முடிச்சு விட்டுரும்!!!
Author: Hemalatha Ramkumar2 January 2025, 6:29 pm
ஒரு சில உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது ஊட்டச்சத்தை அதிகரித்துக் கொடுக்கும் ஒரு அற்புதமான வழியாக இருக்கலாம். ஆனால் அதே நேரத்தில் ஒரு சில உணவுகளை ஒன்றாக சாப்பிடுவது அஜீரணம், வாயுத்தொல்லை மற்றும் பிற உடல்நல சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும். நெய் என்பது ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் எக்கச்சக்கமான ஆரோக்கிய பயன்கள் தரக்கூடிய ஒரு சிறந்த பொருள். அத்தியாவசிய வைட்டமின்களால் நிரப்பப்பட்டுள்ள நெய் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. ஆனால் நெய்யை எல்லா விதமான உணவுகளோடும் சாப்பிடுவது சரியானதாக இருக்காது.
ஒரு சில உணவுகளோடு சேர்த்து நெய்யை சாப்பிடும் போது அதன் ஊட்டச்சத்து மதிப்பு குறைகிறது. எனவே நெய்யுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத 5 முக்கியமான உணவுப் பொருட்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தேன்
நெய்யுடன் தேனை சேர்த்து சாப்பிடுவதை எதிர்த்து ஆயுர்வேதம் எச்சரிக்கை வழங்கியுள்ளது. ஏனெனில் இது நம்முடைய உடலில் ஒரு நச்சு விளைவை உண்டாக்கும். இந்த கலவை நச்சுக்களை உருவாக்கி அதனால் செரிமான பிரச்சனைகள் மற்றும் பிற உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தலாம்.
டீ அல்லது காபி
நெய்யுடன் டீ அல்லது காபி சாப்பிடுவது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை குறைக்கும். இந்த பானங்களில் காணப்படும் கஃபைன் நெய்யில் உள்ள கொழுப்பில் கரையும் வைட்டமின்களோடு வினைபுரிந்து சமநிலையின்மையை உருவாக்குகிறது. கூடுதலாக கஃபைனின் தூண்டுதல் விளைவுகள் நெய்யின் அமைதியூட்டும் விளைவுகளோடு மோதி செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும்.
தயிர்
தயிரோடு நெய்யை சாப்பிடுவதால் அஜீரண கோளாறு ஏற்படும். நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் தயிரில் உள்ள லாக்டிக் அமிலத்தோடு வினைபுரிந்து, குடல் பாக்டீரியாக்களில் சமநிலையை பாதிக்கிறது. கதகதப்பான மற்றும் குளிர்ந்த தன்மை கொண்ட இரண்டு வெவ்வேறு உணவுகளை நீங்கள் சாப்பிடும் பொழுது அது உங்களுடைய செரிமான சமநிலையை பாதிக்கும்.
வெந்நீர்
ஒருபோதும் வெந்நீருடன் நெய் சேர்த்து சாப்பிட வேண்டாம். ஏனெனில் வெந்நீர் நெய்யின் மூலக்கூறு அமைப்பை மாற்றக்கூடும். அதிக வெப்பநிலையின் காரணமாக நெய்யானது ஃபிரீ ரேடிக்கில்களின் உற்பத்திக்கு காரணமாக அமைகிறது. இந்த காம்பினேஷன் செரிமான செயல்முறையை சீர்குலைத்து, அசௌகரியம் மற்றும் வயிற்று உப்புசத்தை உண்டாக்கும்.
இதையும் படிக்கலாமே: இதயத்துல ஆரம்பிச்சு சருமம் வரை எல்லாத்துக்கும் நல்லது மட்டுமே செய்யும் ஊற வைத்த முந்திரி பருப்பு!!!
முள்ளங்கி
முள்ளங்கியின் வாசனை நெய்யில் உள்ள கொழுப்பு தன்மையோடு மோதி, செரிமான அமைப்பின் சமநிலையை பாதிக்கிறது. மேலும் இதனால் அசௌகரியம், வயிற்று உப்புசம் மற்றும் வாயு தொல்லை ஏற்படும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.