குளிர் காலத்திலும் ஃபுல் எனர்ஜயோட இருக்க உங்க டயட்ல இது இருந்தா போதும்!!!
Author: Hemalatha Ramkumar1 January 2025, 6:51 pm
அது என்னவோ தெரியாது, குளிர்காலம் வந்து விட்டாலே கூடவே சோம்பேறித்தனமும் வந்து விடுகிறது. காலையில் எழுந்திருப்பது மிகவும் சிரமமாக மாறுகிறது. கதகதப்பான இடத்தில் போர்வைக்குள் அமர்ந்து சூடான ஒரு கப் டீ அல்லது காபி குடித்துக்கொண்டே டிவி அல்லது மொபைல் போனை பார்ப்பதில் இருக்கும் சுகமே தனி. ஆனால் இப்படி தினமும் இருக்க முடியாது. நம்முடைய அன்றாட வேலைகளை செய்வதற்கு நமக்கு போதுமான அளவு ஆற்றல் தேவைப்படுகிறது.
இந்த ஆற்றலை பெறுவதற்கு நாம் சரியான உணவுகளை சாப்பிடுவது அவசியம். ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தற்காலிகமாக ஆற்றல் ஊக்கத்தை அளித்தாலும், அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது. எனவே குளிர்காலத்தில் ஏற்படும் சோம்பேறித்தனத்தை போக்கி நாள் முழுவதும் உங்களுக்கு தேவையான ஆற்றலை வழங்க உதவும் சில சிறந்த உணவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வாழைப்பழம்
வாழைப்பழம் என்பது ஆற்றல் அளவுகளை அதிகரிப்பதற்கு குளிர் காலத்திற்கு ஏற்ற ஒரு உணவு. பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த வாழைப்பழம் குளிர் காலத்தில் ஏற்படும் சோம்பேறித்தனத்தை எதிர்த்து போராடுவதற்கு உதவுகிறது. ஜீரணமாவதற்கு எளிமையாக இருப்பதால் இது நமக்கு உடனடி ஆற்றலை தருகிறது.
நட்ஸ்
நட்ஸ் என்பது உங்களுடைய குளிர்கால டயட்டில் சேர்க்க வேண்டிய ஒரு முக்கியமான உணவுப்பொருள். ஆரோக்கியமான கொழுப்புகள், புரோட்டின் மற்றும் நார்ச்சத்து நிறைந்த நட்ஸ் வகைகள் தொடர்ச்சியான ஆற்றலையும், கதகதப்பையும் அளிக்கிறது. பாதாம் பருப்பு, வால்நட் பருப்பு போன்றவற்றில் மெக்னீசியம், காப்பர் மற்றும் வைட்டமின் B6 காணப்படுகிறது. சோர்வை எதிர்த்து போராடவும், நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த நல்வாழ்வை அதிகரிக்கவும் நட்ஸ் வகைகளை நீங்கள் தின்பண்டமாக சாப்பிடலாம்.
பாப்கார்ன்
முழு தானிய பாப்கார்ன்களில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துக்கள் மற்றும் B வைட்டமின்கள் இருப்பதால் இது தொடர்ச்சியான ஆற்றலை வெளியிடுகிறது. உங்களுடைய ஆற்றல் அளவுகளை அதிகரிப்பதற்கு இந்த குளிர் நாட்களில் தாராளமாக நீங்கள் பாப்கார்னை சாப்பிடலாம்.
வெல்லம்
வெல்லம் என்பது குளிர் காலத்தில் எனர்ஜி பூஸ்ட்டராக செயல்படும் ஒரு இயற்கை பொருள். இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த வெல்லம் சோர்வு மற்றும் வலுவிழந்த தன்மையை எதிர்த்து போராடுகிறது. இதில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் தொடர்ச்சியான ஆற்றலை தருகிறது. வெல்லத்தை மிதமான அளவு சாப்பிடுவதன் மூலமாக நமக்கு நாள் முழுவதும் தேவையான ஆற்றல் மற்றும் பல்வேறு பலன்கள் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: இந்த வருடம் ஆரோக்கியமான உடலை பெறுவதற்கு நீங்கள் தவிர்க்க வேண்டிய சில வாழ்க்கைமுறை தவறுகள்!!!
டார்க் சாக்லேட்
ஃபிளவனாய்டுகள், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் நிறைந்த டார்க் சாக்லெட் சோர்வை எதிர்த்து போராடவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. டார்க் சாக்லேட்டில் காணப்படும் மற்றும் ஜியோபுரோமைன் இயற்கை ஆற்றல் ஊக்கியாக அமைகிறது. அதே நேரத்தில் இதிலுள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் குளிர் காலத்தில் ஏற்படும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.