உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள அடிக்கடி இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!!!

Author: Hemalatha Ramkumar
15 February 2023, 5:33 pm

மனநிலையில் விரைவான மாற்றங்கள் மற்றும் உணர்ச்சி நிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்களுக்கு பல அடிப்படை காரணங்கள் இருக்கலாம். ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக பல பெண்கள் PMS-இன் (மாதவிடாய் முன் நோய்க்குறி) போது மனநிலை மாற்றங்களை அனுபவிக்கின்றனர்.

இது எப்போதும் ஹார்மோன்களுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டியதில்லை. ஊட்டச்சத்தும்அதற்கு காரணமாக இருக்கலாம்.
ஒருவர் சரியாக சாப்பிடவில்லை என்றால், உங்களின் சிறந்த நண்பர்களைச் சந்திப்பது, ஷாப்பிங் செய்வது போன்ற சில நடவடிக்கைகள் உங்கள் மனநிலை மாற்றத்திற்கு உதவாது. உங்களுக்கு மகிழ்ச்சியான ஹார்மோன்களை அதிகரிக்கும் உணவுகள் தேவை. மனநிலை மாற்றத்திற்கு உதவும் நான்கு வகையான உணவுகளை இப்போது பார்க்கலாம்.

கீரை: கீரையில் இரும்பு, மெக்னீசியம் மற்றும் ஃபைனிலெதிலமைன் உள்ளன. இது டோபமைனின் சினாப்டிக் அளவை அதிகரிப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. இது மனநிலை மற்றும் மன அழுத்தம் போன்ற மனித நடத்தையை பாதிக்கிறது.

புளித்த உணவுகள்: தயிர் மற்றும் கிம்ச்சி போன்ற உணவுகள் குடலுக்கான சிறந்த புரோபயாடிக் விருப்பங்கள். அவை மனநிலையை மேம்படுத்துகின்றன.

புரதம்: புரதத்தில் அமினோ அமிலங்கள் உள்ளன. அவை மனநிலையை மேம்படுத்த உதவும் நரம்பியக்கடத்திகள்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள்: ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த பழங்கள் மூலம் உங்கள் மனநிலையை அதிகரிக்கவும். உங்கள் மனநிலையை சரிசெய்ய மல்பெரி, ப்ளூபெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரிகளை உங்கள் உணவில் சேர்க்கலாம்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!