இளநரையை உடனடியா நிறுத்த உங்க டயட்ல இருக்க வேண்டிய உணவுகள்!!!
Author: Hemalatha Ramkumar12 December 2024, 6:52 pm
இளநரை என்பது இன்றைக்கு இளைஞர்கள் இடையே மிகப்பெரிய தொல்லையாக இருக்கக்கூடிய ஒரு விஷயமாக மாறிவிட்டது. தற்போது இருக்கும் இளைஞர்கள் 30 வயது அடையும் முன்னரே நரைமுடி ஏற்பட தொடங்கி விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் மரபணுக்கள், மன அழுத்தம், வைட்டமின் குறைபாடுகள் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை, மோசமான உணவு, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் குறைபாடு, அளவுக்கு அதிகமாக சுற்றுச்சூழல் நச்சுக்களுக்கு நம்மை வெளிப்படுத்திக் கொள்வது போன்றவையும் முக்கிய பங்கு வகிக்கிறது.
கூடுதலாக ஒரு சில மருத்துவ நிலைகளின் காரணமாகவும் இளநரை ஏற்படலாம். இந்த இளநரை பிரச்சனையை தடுப்பதற்கு உங்களுடைய உணவில் நீங்கள் கட்டாயம் சேர்க்க வேண்டிய சில உணவுகள் பற்றி பார்க்கலாம்.
கீரை
கீரையை உங்களுடைய அன்றாட உணவில் சேர்ப்பது இளநரை பிரச்சனையை சிறப்பாக தடுப்பதற்கு உதவும். ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த கீரை மெலனின் உற்பத்தியை அதிகரித்து, ஆக்ஸிடேட் அழுத்தத்தை குறைத்து, உங்களுடைய ஒட்டுமொத்த தலைமுடி வளர்ச்சிக்கு உதவி இளநரை பிரச்சனைக்கு முடிவுக்கட்டுகிறது.
நட்ஸ் மற்றும் விதைகள்
வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்களால் நிரப்பப்பட்ட நட்ஸ் மற்றும் விதைகள் இளநரையை எதிர்த்து சிறப்பாக போராடுகிறது. பாதாம் பருப்பு, சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணி விதைகளில் காப்பர், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் E இருப்பதால் இது மெலனின் உற்பத்தியை அதிகரித்து, தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் வால்நட் பருப்பு, ஆளி விதைகள் மற்றும் சியா விதைகள் போன்றவை உங்களுடைய மயிர் கால்களுக்கு தேவையான போஷாக்கை வழங்குகிறது.
முட்டை
புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த முட்டைகளை சாப்பிடுவது இளநரை பிரச்சனையை உடனடியாக நிறுத்த உதவும். பயோட்டின், வைட்டமின் B12 மற்றும் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் முட்டையில் அதிகம் காணப்படுகிறது. இது தலைமுடி வளர்ச்சியை அதிகரித்து, மயிர் கால்களுக்கு வலு சேர்க்கும். தினமும் முட்டை சாப்பிடுவதால் தலைமுடியின் அமைப்பு மேம்படுத்தப்பட்டு, ஒட்டுமொத்த மயிர் கால்களின் ஆரோக்கியம் வலுவாகும். இதனால் உங்களுக்கு ஆரோக்கியமான, கருமையான தலைமுடி கிடைக்கும்.
இதையும் படிச்சு பாருங்க: ஹார்ட் அட்டாக் பின்னணியில் இருக்கும் இனிப்பு பானங்கள்… உஷாரா இருக்கணும்!!!
கேரட்
வைட்டமின் A மற்றும் பீட்டா கரோட்டின் அதிகம் காணப்படும் கேரட்டுகள் நரைமுடி வளர்ச்சியை குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மயிர் கால்களை பாதுகாத்து, தலை முடியின் வளர்ச்சியை மேம்படுத்தும். தினமும் கேரட் சாப்பிடுவதால் உங்களுடைய மயிர்க்கால்களின் ஆரோக்கியம் மேம்படும். மேலும் ஆக்சிடேட்டிவ் அழுத்தம் குறைந்து நரைமுடி கருமையாக மாறும்.
டார்க் சாக்லேட்
ஃபிளவனாய்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த டார்க் சாக்லேட் நரைமுடி ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் கொக்கோவில் உள்ள கேட்டசின்கள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மெலனின் உற்பத்தியை தூண்டி, மயிர்க்கால்களை பாதுகாக்கிறது. இது தலைமுடியின் இயற்கையான நிறத்தை பராமரித்து, அதனை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்க உதவுகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.