புதுமண தம்பதியா நீங்க… வீட்ல சீக்கிரமே குவா குவா சத்தம் கேட்க இந்த உணவுகள் ஹெல்ப் பண்ணும்!!!

Author: Hemalatha Ramkumar
12 October 2024, 5:14 pm

நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் கட்டாயமாக நம்முடைய இனப்பெருக்க ஆரோக்கியத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு குறிப்பிட்ட உணவு மூலமாக மட்டுமே கருத்தரிப்பதை உறுதி செய்ய முடியாது என்றாலும் உங்களுடைய உணவு மற்றும் வாழ்க்கை முறையில் நீங்கள் ஏற்படுத்தும் ஒரு சில முக்கியமான மாற்றங்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவரின் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. தொடர்ந்து பலர் கருத்தரிப்பதில் சிக்கல்களை அனுபவித்து வருகின்றனர். அப்படி இருக்க ஒருவரது இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகிறது. அதற்கு இந்த பதிவு உங்களுக்கு உதவும். 

பெர்ரி பழங்கள் 

பெர்ரி பழங்களில் வைட்டமின் சி மற்றும் போலிக் ஆசிட் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகமாக உள்ளது. இது கருத்தரித்தலுக்கு பின்னர் ஆரோக்கியமான குழந்தை வளர்ச்சிக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள். ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி பழங்களில் இயற்கையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விக்க எதிர்ப்பு பைட்டோநியூட்ரியன்ட்கள் இருப்பதால் இவை இரண்டுமே ஆண்கள் மற்றும் பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. 

இது உங்களுக்கு உதவியா இருக்கும்னு நினைக்கிறோம்: அழகழகான பூக்களை வைத்தே டயாபடீஸ் பிரச்சினையை கட்டுப்படுத்தலாம்னு சொன்னா நம்புவீங்களா…???

கேல் 

ஆங்கிலத்தில் கேல் என்று அழைக்கப்படும் பரட்டைக்கீரையில் இனப்பெருக்கத்தை மேம்படுத்தும் வலிமையான பண்புகள் உள்ளது. அதிலும் குறிப்பாக போலேட், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் இந்த கீரையில் அதிகமாக இருக்கிறது. இவை அனைத்துமே இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு முக்கியமாக கருதப்படும் சில ஊட்டச்சத்துக்கள். இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் உணவுகளில் மிக முக்கியமானது இந்த பரட்டைக்கீரை.

தக்காளி 

வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ள தக்காளி பழங்கள் எந்த ஒரு உணவிலும்  ஊட்டச்சத்துக்களை சேர்ப்பதற்கு உதவுகிறது. கூடுதலாக தக்காளி பழங்களில் உள்ள லைகோபின் என்ற பைட்டோகெமிக்கல் குறிப்பாக இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக அமைகிறது. இது ஆண்களின் விந்தணு எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் நகரும் திறனை அதிகரிப்பதாக ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களில் இது எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் ஒரு சில புற்றுநோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. 

மத்தி மற்றும் வஞ்சிரம்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள இந்த இரண்டு மீன்களும் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் பாசிடிவான விளைவுகளை ஏற்படுத்தும். கருத்தரிக்க விரும்பும் பெண்களுக்கு குறிப்பாக மீன்கள் பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆண்கள் மற்றும் பெண்களின் இனப்பெருக்க திறனை மேம்படுத்தும்.

எனவே திருமணமாகி குழந்தை வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் தம்பதிகள் மேலே குறிப்பிட்டுள்ள இந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக தங்களுடைய இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தி தங்களது குடும்பத்தில் மூன்றாவது குட்டி உறுப்பினரை கூடிய விரைவில் சேர்க்கலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 161

    0

    0