உங்க கல்லீரல் ஹெல்தியா இருக்கணும்னு நினைச்சா இதெல்லாம் கட்டாயம் சாப்பிடுங்க!!!

Author: Hemalatha Ramkumar
3 October 2024, 9:53 am

நமது உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு, செரிமானம், நச்சு நீக்கம் மற்றும் வைட்டமின் சேமிப்பு போன்ற  செயல்பாடுகளுக்கு பொறுப்பான மிக முக்கிய உறுப்பு கல்லீரல். இது மனித உடலில் கிட்டத்தட்ட 2 சதவீத எடையை கொண்டிருக்கிறது. கல்லீரல் குறிப்பாக மதுபானங்கள் மற்றும் போதை மருந்துகள் போன்ற நச்சுத்தன்மை கொண்டுள்ள பொருட்களை ரத்தத்தில் இருந்து வடிகட்டி, அவற்றை உடைத்து உடலில் இருந்து வெளியேற்றுகிறது. மேலும் கல்லீரல் உற்பத்தி செய்யும் பைல் என்ற திரவம் கொழுப்புகளை செரிமானம் செய்யவும், கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நீங்கள் என்னென்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.

பெர்ரி பழங்கள் 

பெர்ரி பழங்களில் ஃபிளவனாய்டுகள் எனப்படும் ஆன்டி-ஆக்சிடன்டுகள் அதிகமாக இருப்பதால் இது ஆரோக்கியமான கல்லீரல் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மேலும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை சிறப்பான முறையில் வெளியேற்றுகிறது. 

ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியமான கொழுப்புகளின் சிறந்த மூலமான ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியமான கல்லீரல் நொதிகளை ஊக்குவிப்பதற்கு பெயர் போனது. 

பச்சை இலை காய்கறிகள்

கீரை, பார்சலே, கேல் போன்ற பச்சை இலை காய்கறிகளில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது. இது கல்லீரலின் நச்சு நீக்கும் திறனை அதிகப்படுத்த உதவுகிறது. 

கிரீன் டீ 

உங்களுடைய கல்லீரலை ஆரோக்கியமாக வைப்பதற்கு இருக்கும் மிகவும் வலிமையான ஆப்ஷனில் இதுவும் ஒன்று. அதிக ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த கிரீன் டீ கல்லீரல் நச்சுக்களை இயற்கையான முறையில் சுத்தம் செய்வதற்கு உதவுகிறது. 

சிட்ரஸ் பழங்கள் 

சிட்ரஸ் பழங்களில் உள்ள பயோ ஆக்டிவ் பாலிபீனால்கள் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு ஆதரவு தருகிறது. 

நட்ஸ் வகைகள் 

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள நட்ஸ் வகைகள் உங்களுடைய கல்லீரல் நச்சு நீக்க உணவுக்கு ஒரு சிறந்த கூடுதலாக அமைகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!