ஆரோக்கியம்

ஹெல்தியா இருக்க இந்த மாதிரி உணவுகளை தினமும் சாப்பிட்டா கூட தப்பில்ல!!!

இன்றைய பிஸியான வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான உணவை பராமரிப்பது என்பது ஒரு சவாலாக அமைகிறது. ஆனால் இதற்காக நாம் வருந்த தேவை இல்லை. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, அதே நேரத்தில் சுவையாக இருக்கும் பல்வேறு உணவுகள் இந்திய சமையல் முறையில் கிடைக்கிறது. பல பாரம்பரிய இந்திய உணவுகள் இயற்கையான பொருட்களைக் கொண்டு செய்யப்பட்டு நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த உணவுகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இருப்பதால் இது நம்முடைய நீண்ட கால ஆரோக்கியத்தில் பாசிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

உங்களுடைய செரிமானத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் ஒரு சரிவிகித உணவு சாப்பிட வேண்டும். இதற்கு இந்திய உணவுகள் ஒரு சிறந்த தீர்வாக அமைகின்றன. அந்த வகையில் ஆரோக்கியமாகவும், உடலை கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்வதற்கு தினமும் நீங்கள் சாப்பிடக்கூடிய 5 ஊட்டச்சத்து நிறைந்த இந்திய உணவுகள் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பாசிப்பருப்பு கடையல்

பாசிப்பருப்பில் இரும்பு சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இது நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தந்து, ஆற்றலை அதிகரித்து, தசைகளை சரி செய்கிறது. உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவு.

காய்கறி கிச்சடி 

கிச்சடி என்பது எளிமையாக செரிமானமாக கூடிய ஒரு உணவாக இருக்கிறது. நெய், இஞ்சி மற்றும் சீரகம் ஆகியவை கொண்டு கிச்சடிக்கு தாளிப்பு கொடுக்கப்படுகிறது. இது ஃபிளேவரை அதிகரிப்பது மட்டுமல்லாமல் செரிமானத்தையும், மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கிறது.

பாலக் கறி 

இந்த சூப்பர் ஃபுட் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆற்றலை ஊக்குவிக்கிறது. கீரையில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின்கள் A, C மற்றும் K ஆகியவை நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள். இதில் உள்ள தாவர அடிப்படையிலான இரும்புச்சத்து நமக்கு நிலையான ஆற்றலை கொடுத்து, ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கிறது.

இதையும் படிக்கலாமே: பாதாம் பருப்பு சாப்பிடுறது நல்ல விஷயம் தான்…. ஆனா இந்த தப்பை மட்டும் பண்ணிட்டா அதனால ஒரு பிரயோஜனமும் கிடைக்காது!!!

சன்னா மசாலா 

தாவர அடிப்படையிலான புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த சன்னா மசாலா செரிமானம், ரத்த சர்க்கரை சீரமைப்பு மற்றும் உடல் எடை கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு உதவுகிறது. இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடன்ட் இருப்பதால் இது நம்முடைய சருமத்தை மேம்படுத்தி, இதய ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை கவனித்துக் கொள்கிறது.

தயிருடன் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் 

இந்த உணவு தகி என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் மாம்பழம், பப்பாளி, பெர்ரி போன்ற பழ வகைகள் மற்றும் வால்நட் அல்லது பாதாம் போன்ற நட்ஸ் வகைகளால் செய்யப்படுகிறது. இந்த காம்பினேஷன் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை மினுமினுப்பாக்கி, ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகள் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

21 hours ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

23 hours ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

23 hours ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

23 hours ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

24 hours ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

24 hours ago

This website uses cookies.