என்னது இந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் டயாபடீஸ் வருமா…???
Author: Hemalatha Ramkumar20 September 2024, 6:14 pm
உங்களுடைய உணவு பழக்க வழக்கங்கள் என்பது உங்கள் உடலின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. அப்படியான ஒரு நாள்பட்ட நிலையான டயாபடீஸ் மோசமான உணவு பழக்க வழக்கங்கள் குறிப்பாக ஒரு சில உணவுகளை அதிகப்படியாக சாப்பிடுவதுடன் தொடர்பு கொண்டுள்ளது. இந்த உணவுகள் ஆரோக்கியமானதாக கருதப்பட்டாலும் அவற்றை அதிக அளவில் சாப்பிடும் பொழுது, அது ரத்த சர்க்கரை அளவுகளை அதிகரிப்பது, இன்சுலின் எதிர்ப்பு திறன் மற்றும் வகை 2 டயாபடீஸ் ஏற்படுவதற்கான அபாயத்தை உண்டாக்குகிறது. அவ்வாறான ஒரு சில உணவுகளை பற்றி பார்ப்போம்.
சர்க்கரை நிறைந்த பானங்கள்
சோடா, இனிப்பு கலந்த ஜூஸ் வகைகள் மற்றும் எனர்ஜி பானங்கள் போன்றவற்றில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை இருப்பதால் இவை ரத்த குளுக்கோஸ் அளவை உடனடியாக அதிகரிக்கக்கூடும். வழக்கமான முறையில் இவற்றை நீங்கள் குடித்து வந்தால் உங்கள் உடலில் இன்சுலின் எதிர்ப்பு திறன் ஏற்பட்டு உடல் எடை அதிகரிக்கும். இவை இரண்டுமே டயாபடீஸ் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகள்.
மேலும் படிக்க: உங்கள் ஆயுளை அதிகரிக்க உதவும் சில பழக்க வழக்கங்கள்!!!
வெள்ளை பிரட் மற்றும் பேக்கரி பொருட்கள் சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படும் வெள்ளை பிரட் மற்றும் கேக் போன்றவற்றில் அதிக கிளைசிமிக் எண் இருப்பதால் இவை ரத்த சர்க்கரை அளவுகளை உடனடியாக அதிகரித்து விடும். இவற்றை அதிக அளவில் சாப்பிடுவது இன்சுலின் எதிர்ப்பு திறனை ஏற்படுத்தும்.
பொரித்த உணவுகள்
எண்ணெயில் டீப் ஃப்ரை செய்யப்பட்ட உணவுகள் ஆரோக்கியமற்ற கொழுப்புகளை கொண்டுள்ளன. இவை உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். மேலும் கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகரித்து, இன்சுலின் எதிர்ப்பு திறனுக்கு பங்களிக்கிறது. இவை அனைத்துமே டயாபடீஸ் செயற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
பிரிசர்வேட்டிவ்கள், உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்த பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிக அளவில் சாப்பிடுவதால் நமது உடலின் வளர்சிதை மாற்றம் மற்றும் வீக்கத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்பட்டு அதனால் வகை 2 டயாபடீஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
இனிப்பு சேர்க்கப்பட்ட தானியங்கள்
ஓட்ஸ், கெலாக்ஸ் போன்ற காலை உணவுகளில் சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இவை ரத்த சர்க்கரை அளவை உடனடியாக அதிகரித்து விடும். இவற்றை நீங்கள் அடிக்கடி சாப்பிடும் பொழுது அதனால் உடல் பருமன் மற்றும் வகை 2 நீரழிவு நோய் ஏற்படலாம்.
அரிசி
அரிசியை பதப்படுத்தும் செயல் முறையில் அதில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஆகியவை நீக்கப்படுகிறது. இதனால் இது அதிக கிளைசிமிக் எண் கொண்ட உணவாக மாறுகிறது. வழக்கமான முறையில் சாதத்தை அதிகமாக சாப்பிட்டு வர உடலில் ரத்த சர்க்கரை சமநிலையின்மை ஏற்பட்டு அதனால் டயாபடீஸ் ஏற்படுவதற்கான அபாயம் உண்டாகிறது.
மிட்டாய்கள் மற்றும் இனிப்புகள்
மிட்டாய், சாக்லேட் மற்றும் இனிப்புகள் போன்றவற்றில் சர்க்கரை அதிகமாக இருக்கும் என்பதால் அவை உடனடியாக குளுக்கோஸ் அளவுகளை அதிகரிக்கும். அதிக அளவில் இவற்றை வழக்கமாக சாப்பிட்டு வர இன்சுலின் எதிர்ப்பு திறன் மற்றும் உடல் எடை அதிகரிக்கும்.
பழச்சாறுகள்
பழச்சாறுகளில் வைட்டமின்கள் இருந்தாலும் அவற்றில் அதிக அளவு இயற்கை சர்க்கரை, அதுவும் எந்த ஒரு நார்ச்சத்தும் இல்லாமல் இருப்பதால் அவை ரத்த சர்க்கரை அளவுகளை அதிகரிக்கின்றன.
முழு கொழுப்பு கொண்ட பால் சார்ந்த பொருட்கள்
பால் சார்ந்த பொருட்கள் என்பது ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக இருந்தாலும் முழு கொழுப்பு கொண்ட பால், சீஸ் மற்றும் கிரீம் போன்றவற்றில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் இருக்கும் காரணத்தினால் உடல் எடை அதிகரிப்பு மற்றும் இன்சுலின் எதிர்ப்பு திறன் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது. இவை இரண்டுமே டயாபடீஸ் ஏற்படுவதற்கான காரணங்கள்.
உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ்
உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் பிற பேக்கேஜ செய்யப்பட்ட ஸ்நாக்ஸ் வகைகளில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் உப்பு இருக்கின்றன. இதனை அதிக அளவு சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்பை ஏற்படுத்தி ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் எதிர்மறையான தாக்கத்தை கொண்டுள்ளது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.