குழந்தைகளோ, பெரியவர்களோ பெரும்பாலானவர்களால் விரும்பி பருகப்படும் ஒரு பானம் பால். பாலின் நன்மைகளை பல்வேறு வழிகளில் பெறலாம். சாக்லேட் மில்க் முதல் பனானா மில்க் ஷேக் மற்றும் புரோட்டீன் ஷேக் வரை பாலை வைத்து எக்கச்சக்கமான ஊட்டச்சத்து மிகுந்த பானங்களை நம்மால் தயார் செய்ய முடியும். ஒரு சிலருக்கு பாலை வெதுவெதுப்பாக பருக பிடிக்கும். இன்னும் சிலர் குளிர்ந்த நிலையில் பருகுவதற்கு விரும்புவார்கள். எனினும் பாலின் செரிமான விகிதம் என்பது மிகவும் குறைவு. எனவே பாலை நாம் புத்திசாலித்தனமாக பருகுவது அவசியம்.
பாலை ஒரு சில உணவுகளோடு சேர்த்து பருகுவது செரிமானத்தை தடை செய்து அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். ஒரு சில உணவுகளை பால் சாப்பிடுவதற்கு முன்பு அல்லது பால் சாப்பிடுவதற்கு பிறகும் சாப்பிடுவது பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைப்பதை தடை செய்வதோடு, அதனால் ஒரு சில பக்க விளைவுகளையும் உண்டாக்கும். எனவே எந்த ஒரு செரிமான பிரச்சனைகளில் இருந்தும் உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பாலோடு சாப்பிடக்கூடாத உணவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மீன்
மீன் மற்றும் பால் ஒரு தீங்கு விளைவிக்கும் காம்பினேஷன் ஆக அமைகிறது. மீன் சாப்பிடுவதற்கு முன்பு அல்லது பின்னரோ பால் குடிப்பது செரிமான பிரச்சனைகள் மற்றும் நச்சு விளைவுகளை உண்டாக்கும். பாலில் காணப்படும் கேசின் என்ற புரோட்டீன் மீனில் உள்ள மெர்குரியோடு இணைந்து செரிமானத்தை மெதுவாக்கி, நச்சுக்கள் உறிஞ்சப்படுவதை அதிகரிக்கும். மேலும் இந்த காம்பினேஷன் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று வலியை கூட ஏற்படுத்தலாம்.
தர்பூசணி
பாலில் உள்ள மலமிளக்கும் பண்புகள் செரிமானத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும் இது வயிற்று வலி, நீர்ச்சத்து இழப்பு மற்றும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும். அளவுக்கு அதிகமாக உடலில் இருந்து நீர் இழப்பு ஏற்படுவது மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை குடலின் சமநிலையை சீர்குலைக்கும். ஆகவே தர்பூசணி பழத்தோடு பாலை ஒருபோதும் சாப்பிட வேண்டாம்.
உப்பு நிறைந்த தின்பண்டங்கள்
உப்பில் உள்ள அதிக சோடியம் பாலின் பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஊட்டச்சத்துக்களோடு இணையும் போது எலக்ட்ரோலைட் சமநிலையை பாதித்து, அதனால் வயிற்று உப்புசம், வயிற்று வலி மற்றும் நீர்ச்சத்து இழப்பை ஏற்படுத்தும். அளவுக்கு அதிகமான சோடியம் செரிமானத்தை மோசமாக்கி வயிற்றில் அசௌகரியத்தை உண்டாக்கும்.
இதையும் படிச்சு பாருங்க: குளிர்காலத்தில் பாடாய்படுத்தும் மூட்டு வலியிலிருந்து விடுபட நீங்கள் பின்பற்ற வேண்டிய அன்றாட பழக்கங்கள்!!!
புளிக்க வைக்கப்பட்ட உணவுகள்
தயிர் அல்லது ஊறுகாய் போன்ற புளிக்க வைக்கப்பட்ட உணவுகளோடு பாலை சாப்பிடுவது அறிவுறுத்தப்படவில்லை. ஏனெனில் புளிக்க வைக்கப்பட்ட உணவுகளில் உள்ள லாக்டிக் அமிலம் பாலின் கேசின் புரோட்டீனுடன் வினைபுரிகிறது. இந்த காம்பினேஷன் வயிற்று உப்புசம், வாயு தொல்லை மற்றும் வயிற்று வலியை உண்டாக்கும். மேலும் இந்த காம்பினேஷன் காரணமாக ஏற்பட்ட அமிலம் நிறைந்த சூழல் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதையும் பாதிக்கிறது.
வாழைப்பழம்
வாழைப்பழம் மற்றும் பால் காம்பினேஷன் பல நன்மைகளுக்காக போற்றப்பட்டாலும் இது செரிமானத்தில் தலையிடலாம். இந்த இரண்டுமே அதிக கலோரி அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகள். இதனால் நமது உடலால் வாழைப்பழத்தில் உள்ள மாவுச்சத்து மற்றும் பாலில் உள்ள லாக்டோசை செரிமானம் செய்வதற்கு தேவையான செரிமான நொதிகளை உற்பத்தி செய்வதில் தடுமாறுகிறது. இதன் விளைவாக வாயு தொல்லை, அசௌகரியம் மற்றும் வயிற்று உப்புசம் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த மிதமான செரிமானம் நச்சுக்கள் குவிவதற்கும் காரணமாக அமைகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.