வெயிட் லாஸ் பயணத்துல இருக்கும் போது தப்பி தவறி கூட ரெஸ்டாரண்ட்ல இதெல்லாம் ஆர்டர் பண்ணி சாப்பிடாதீங்க!!!

Author: Hemalatha Ramkumar
3 January 2025, 3:04 pm

உடல் எடை குறைப்பு பயணத்தில் இருப்பவர்கள் வெளி உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த கடினமான விதியை எல்லா நேரத்திலும் உங்களால் பின்பற்ற முடியாது என்பது புரிந்து கொள்ளக் கூடியது. எனினும் அப்படி நீங்கள் வெளியில் சமைக்கப்பட்ட உணவை சாப்பிடும் பொழுது ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம். அந்த வகையில் உடல் எடை குறைப்பு பயணத்தில் இருப்பவர்கள் வெளி உணவுகளில் எவற்றை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொரிக்கப்பட்ட உணவுகள்

வெளியில் விற்கப்படும் உணவுகள் ஆலிவ் எண்ணெய் அல்லது பிற ஆரோக்கியமான எண்ணெய்களில் சமைக்கப்பட்டு இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. நம்மில் பெரும்பாலானவர்கள் பொரித்த உணவுகளை வெளியில் ஆர்டர் செய்து சாப்பிடும் பொழுது மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் உங்களுடைய உடல் எடை குறைப்பு பயணம் என்று வரும் பொழுது இது நிச்சயமாக ஒரு மிகப்பெரிய ‘நோ’. இதற்கு பதிலாக நீங்கள் சூப் அல்லது ஆவியில் வேகவைத்த உணவுகளை வாங்கி சாப்பிடலாம்.

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் 

எந்த ஒரு ரெஸ்டாரண்டிலுமே ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் இருக்காது. எனவே முடிந்த அளவு அவற்றை தவிர்த்து புரோட்டின் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஒருவேளை நீங்கள் நான்-வெஜிடேரியனாக இருந்தால் கிரில்டு சிக்கன் அல்லது ஃபிஷ் போன்றவற்றை சாப்பிடலாம். சைவ உணவு சாப்பிடுபவர்கள் கிரில்டு பன்னீர் அல்லது டோஃபு சாப்பிடலாம். ஏனெனில் உடல் எடை குறைப்பு பயணத்திற்கு புரோட்டீன்கள் மிகவும் முக்கியம்.

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள்

மாக்டெயில் மற்றும் காக்டெயில் போன்ற சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை சாப்பிடுவதற்கு ஆசையாக தான் இருக்கும். ஆனால் இவற்றில் உள்ள அதிக அளவு சர்க்கரை உங்களுடைய உடல் எடை குறைப்பு பயணத்திற்கு தடையாக இருக்கும். ஆகவே இதற்கு பதிலாக நீங்கள் கிரீன் டீ, பிளாக் காபி, ஆரோக்கியமான சூப் வகைகள் போன்றவற்றை சாப்பிடலாம்.

டெசர்ட்  

டெசர்ட் இல்லாமல் ஒரு உணவு முழுமை அடையாது போல இருக்கலாம். ஆனால் ஒருவேளை நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்து வந்தால் இனிப்பு என்பது உங்களுக்கு மிகப்பெரிய எதிரி. அதிலும் குறிப்பாக ரெஸ்டாரண்டுகளில்  வழங்கப்படுபவை நிச்சயமாக உங்களுடைய உடல் எடையை அதிகரிக்கும். சர்க்கரையை எந்த வடிவத்தில் சாப்பிடும் பொழுதும் அது உடற்பருமன், டயாபடீஸ் மற்றும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு பொருள் வீட்ல இருந்தா தினமும் கூட பார்ட்டிக்கு போகுற மாதிரி கிளம்பலாம்!!!

சோடியம் நிறைந்த உணவுகள் 

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அதிக சோடியம் சாப்பிடுவதை தவிர்ப்பது அவசியம். சோடியம் அதிகம் சாப்பிடுவது உடல் எடையை குறைப்பதற்கு முட்டுக்கட்டையை போடும். எனவே உடல் எடை குறைப்பு பயணத்தில் இருப்பவர்கள் இந்த மாதிரியான உணவுகளை வெளியில் இருந்து வாங்கி சாப்பிடுவதை கட்டாயமாக தவிர்ப்பது நல்லது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!