இந்த மாதிரி உணவுகளை ஃபிரீசரில் வைத்து சாப்பிடவே கூடாதாம்!!!

Author: Hemalatha Ramkumar
11 December 2024, 5:34 pm

உணவின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஃபிரீசர் ஒரு முக்கிய பங்கு கொண்டுள்ளது. ஒரு சரியான வெப்பநிலையை பராமரிப்பதன் மூலமாக பாக்டீரியா வளர்ச்சியை தடுத்து, உணவு கெட்டுப் போவதை குறைத்து, உணவு சம்பந்தமான நோய்களை குறைக்கிறது. ஃபிரீசிங் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உறைதல் செயல்முறையானது நொதிகள் மூலம் நடைபெறும் வினைகளை மெதுவாக்கி, அதே நேரத்தில் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஃபிளேவர் பராமரிக்கப்படுவதை உறுதி செய்கிறது. 

உறைய வைக்கப்பட்ட உணவுகளில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு 90% வரை பராமரிக்கப்படுகிறது. பருவ கால உணவுகள் மற்றும் இறைச்சிகளை அதிகபட்ச நாட்களுக்கு கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்வதற்கு பிரீசிங் செயல்முறை உதவுகிறது. எனினும் ஒரு சில உணவுகளை ஃபிரீசரில் வைப்பதை முற்றிலுமாக தடுப்பது அவசியம். அப்படி எந்த ஒரு சூழ்நிலையிலும் ஃபிரீசரில் சேமித்து வைக்க கூடாத சில உணவுகள் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

முட்டைகள் 

முட்டையின் ஓடுகளை ஒருபோதும் உறைய வைக்கக்கூடாது. 0℃ -க்கு கீழ் முட்டையில் உள்ள நீர் விரிவடைய தொடங்கும். இதனால் அழுத்தம் அதிகமாகும். எனவே இறுதியில் முட்டை உடைந்து அது வெடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. உறைதல் வெப்ப நிலைகள் முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை விரிவடைவதற்கு தூண்டுவதால் முட்டை இறுதியில் வெடிக்கலாம்.

சீஸ் 

சீஸிலுள்ள அதிக கொழுப்பு மற்றும் ஈரப்பதம் காரணமாக உறைதல் செயல்முறைக்கு ஏற்ற ஒரு உணவு பொருள் அல்ல. ஃபிரீசரில் சேமித்து வைக்கும் பொழுது சீஸ் தனித்தனியாக உதிர்ந்து போவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சீஸின் ஃபிளேவரும் அதன் அமைப்பும் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. ஆகவே சீஸை ஃபிரீசரில் சேமித்து வைப்பதை தவிர்க்கவும்.

இதையும் படிச்சு பாருங்க: நைட் டைம்ல இந்த உணவுகளை சாப்பிட்டால் அன்றைக்கு சிவராத்திரி தான்!!!

சாதம் 

சாதத்தை ஃபிரீசரில் வைப்பதால் அதில் உள்ள ஈரப்பதத்தின் காரணமாக சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டி சாப்பிடுவதற்கு தோதில்லாத ஒன்றாக மாறுகிறது. ஃபிரீசரில் வைத்த சாதத்தை நீங்கள் மீண்டும் சூடுப்படுத்தும் பொழுது அதில் பாக்டீரியா வளர்ச்சி மற்றும் உணவு சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

பாஸ்தா 

சமைத்த பாஸ்தாவை ஃபிரீசரில் வைக்கும் பொழுது அவை ஒன்றோடு ஒன்று ஒட்டி விடுகின்றன. ஈரப்பதத்தை உறிஞ்சும் காரணத்தால் பாஸ்தாவின் அமைப்பு மாறி அது கொழ கொழவென்ற அமைப்பை பெறுகிறது. மேலும் பாஸ்தாவில் சேர்க்கப்பட்ட சாஸ்கள் தனித்தனியாக பிரிந்து அதன் ஃபிளேவர் மற்றும் கிரீமி தன்மை முற்றிலுமாக அழிக்கப்படுகிறது.

பொரிக்கப்பட்ட உணவுகள்

ஃபிரைஸ் மற்றும் நக்கட்ஸ் போன்ற பொரித்த உணவுகள் ஃபிரீசரில் சேமித்து வைப்பதற்கு சரியான உணவுகள் அல்ல. ஏனெனில் அவ்வாறு செய்வது அதில் உள்ள எண்ணெய்களை தனியாக பிரித்து அதன் அமைப்பை பாதிக்கும். மேலும் பொரித்த உணவுகளை உறைய வைத்து மீண்டும் அவற்றை நீங்கள் சூடுப்படுத்தும் பொழுது அவற்றில் எண்ணெய் பிசுக்கு தோன்றி, ஊட்டச்சத்தை இழப்பு மற்றும் ஃபிளேவர் இல்லாமல் போகிறது. அது மட்டுமல்லாமல் வெளியே இருந்த மொறுமொறுப்பான அமைப்பு சாஃப்டாக மாறுகிறது. உட்புறத்தில் உள்ள பொருட்கள் வறண்டு, சுவை இல்லாமல் போகும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Dhanush Upcoming Project Dropped தனுஷ்க்கு இது சோதனை காலம்… முக்கிய படத்தை கைவிட முடிவு?!
  • Views: - 39

    0

    0

    Leave a Reply