இந்த இரண்டு பழங்களை ஒன்றாக சாப்பிடுவது உடலுக்கே ஆபத்தாம்!!!

Author: Hemalatha Ramkumar
23 December 2024, 12:36 pm

பல்வேறு வகையான பழங்களை ஒன்றாக சாப்பிடுவது எப்பொழுதும் ஆரோக்கியமான தின்பண்டமாக கருதப்பட்டாலும் ஒரு சில காம்பினேஷன்கள் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுத்துகிறது. ஃப்ரூட் சாலட் நம்முடைய ஆற்றலை அதிகப்படுத்தினாலும் சில வகையான பழங்களை ஒன்றாக சாப்பிடுவது உடலுக்கு மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஒரு சில பழங்களில் உள்ள நொதிகள், அமிலங்கள் அல்லது பிற காம்பவுண்டுகள் ஒன்றாக இணைக்கப்படும் பொழுது எதிர்மறையாக வினை புரியும்.

ஒன்றோடு ஒன்று இணக்கமில்லாத பழங்களை ஒன்றாக சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள், அலர்ஜி விளைவுகள் அல்லது பிற உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே ஒரு சில பழங்களை ஒன்றாக சாப்பிடும் பொழுது நாம் எந்தெந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், எந்தெந்த பழங்களை தனியாக சாப்பிடுவது நல்லது என்பது பற்றியும் இந்த பதிவில் விளக்கமாக தெரிந்து கொள்ளலாம்.

தர்பூசணி, முலாம்பழம் மற்றும் பிற பழங்கள்

தர்பூசணி மற்றும் முலாம்பழத்தோடு பிற எந்த பழ வகைகளையும் சேர்த்து சாப்பிட வேண்டாம். இதனால் செரிமான பிரச்சனைகள் மற்றும் அசௌகரியம் உண்டாகும். தர்பூசணி பழம் மற்றும் முலாம்பழத்தில் உள்ள அதிக நீர்ச்சத்து மற்றும் தனித்துவமான என்சைம்களின் காரணமாக அது பிற பழங்களுடன் இணையும் பொழுது எதிர்மறையாக வினைபுரிந்து, வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

பப்பாளி பழம் மற்றும் எலுமிச்சை பழம் 

பப்பாளி மற்றும் எலுமிச்சை ஆகிய இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது பரிந்துரை செய்யப்படவில்லை. எலுமிச்சையில் உள்ள அதிக அமிலத்தன்மை பப்பாளியில் உள்ள பப்பையின் என்ற நொடியோடு வினைபுரிந்து செரிமான பிரச்சனைகள் மற்றும் வயிறு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல் இந்த காம்பினேஷன் வயிற்று வலி, குமட்டல் மற்றும் பிற இரைப்பை குடல் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

இதையும் படிச்சு பாருங்க:  நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டதை எப்படி கண்டுபிடிக்கலாம்…???

அமிலம் நிறைந்த பழங்கள் மற்றும் இனிப்பான பழங்கள் 

ஸ்ட்ராபெர்ரி, கிரேப் ஃப்ரூட், அன்னாசிப்பழம் போன்ற அமிலம் நிறைந்த பழங்களை இனிப்பான பழங்களோடு சாப்பிடக்கூடாது. இது செரிமானத்தை சீர்குலைக்கும். அதுமட்டுமல்லாமல் பீச் அல்லது மாதுளம் போன்ற பழங்களோடு வாழைப்பழத்தை சாப்பிடுவது pH அளவை சீர்குலைத்து செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும்.

வாழைப்பழம் மற்றும் கொய்யாப்பழம்

வாழைப்பழத்தோடு கொய்யா பழங்களை சாப்பிடுவது மிகவும் மோசமான ஒரு காம்பினேஷன். இதனை நீங்கள் கட்டாயமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் வாழைப்பழத்தில் உள்ள அதிக அளவு புரோட்டின் மற்றும் நார்ச்சத்து கொய்யாப்பழத்தில் உள்ள வைட்டமின் C மற்றும் அமிலத்துடன் வினைபுரிந்து செரிமான அசௌகரியத்தையும், வயிற்று வலி, வயிற்று உப்புசம் மற்றும் வாயு தொல்லையை உண்டாக்கும்.

ஆரஞ்சு பழங்கள் மற்றும் கேரட் 

ஆரஞ்சு பழங்களோடு கேரட்டை ஒன்றாக சாப்பிட வேண்டாம். ஆரஞ்சு பழங்களில் உள்ள அதிக வைட்டமின் C கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உறிஞ்சப்படுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. மேலும் இந்த காம்பினேஷன் செரிமான அசௌகரியம் மற்றும் வயிற்று வலியையும் உண்டாக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 46

    0

    0

    Leave a Reply