ஆரோக்கியமான வழியில் வெயிட் கெயின் பண்ண ஆசையா… அப்போ நீங்க சாப்பிட வேண்டியது இது தான்!!!

Author: Hemalatha Ramkumar
8 November 2024, 7:36 pm

ஒருபுறம் உடல் எடையை குறைப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது ஒரு கூட்டம். அதே நேரத்தில் உடல் எடையை எப்படியாவது அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறது மற்றொரு கூட்டம். அந்த வகையில் உடல் எடையை அதிகரிப்பதற்கு உதவும் பழங்கள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம். 

இந்த பழங்கள் ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவற்றை அதிகமாக சாப்பிடும் பொழுது அதிக கலோரிகளையும், சர்க்கரை அளவையும் கொண்டுள்ளதால் உடல் எடையை அதிகரிக்கிறது. எனவே இந்த பழங்களோடு சேர்த்து நாம் குறைந்த கலோரி கொண்ட நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும். 

மாம்பழம் 

மாம்பழங்களில் இருப்பதிலேயே அதிக இயற்கை சர்க்கரைகள் உள்ளது. இதனை சாப்பிடும் பொழுது நமக்கு கூடுதல் கலோரி சேர்க்கப்படுகிறது. அதிலும் இதனை அடிக்கடியோ அல்லது அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். 

வாழைப்பழம் 

வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகள் ஏராளம் உள்ளன. வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிட்டால் நம் உடலுக்கு கூடுதல் கலோரிகள் கிடைத்து அது நாளடைவில் உடல் எடை அதிகரிப்பை ஏற்படுத்தும். 

சீதாப்பழம் 

100 கிராம் சீதாப்பழத்தில் 94 கிலோ கலோரிகள் உள்ளன. மேலும் இதில் அதிக சர்க்கரை இருப்பதால் இதனை அதிக அளவு சாப்பிடும் பொழுது உடல் எடை அதிகரிக்கலாம். 

திராட்சை பழங்கள் 

திராட்சை பழங்கள் அதிக இனிப்பு சுவை கொண்டவையாக இருப்பதால் இவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது மிக எளிது. இதில் அதிக சர்க்கரை இருக்கிறது. அதனால் அதிக அளவு திராட்சைகள் சாப்பிடுவது நம்முடைய உடலில் கூடுதல் கலோரிகளை சேர்க்கும். 

சப்போட்டா பழம் 

100 கிராம் சப்போட்டா பழத்தில் 83 கிலோ கலோரிகள் உள்ளன. சப்போட்டா பழங்களில் அதிக அளவு இயற்கை சர்க்கரைகள் மற்றும் கலோரிகள் இருக்கின்றது. இது நமக்கு தேவையான ஆற்றலை வழங்குவது மட்டுமல்லாமல் உடல் எடையை அதிகரிக்கும். 

லிச்சி 

லிச்சி பழங்கள் இனிப்பாக அதே நேரத்தில் குறைந்த நார்ச்சத்து கொண்டது. இதனால் சர்க்கரை உறிஞ்சுதல் விரைவாக நடைபெறும். இதன் காரணமாக இந்த பழத்தை நீங்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிட வாய்ப்புள்ளது. 

இதையும் படிக்கலாமே: புஜங்காசனம்: கீழ் முதுகு வலிக்கு குட்-பை!!!

பேரிச்சம் பழங்கள் 

பேரிச்சம் பழங்களில் அதிக அளவு கலோரி மற்றும் இயற்கை சர்க்கரைகள் காணப்படுகிறது. இதனை அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை நிச்சயமாக அதிகரிக்கும். 100 கிராம் பேரிச்சம் பழங்களில் 282 கிலோ கலோரிகள் உள்ளன. 

மாதுளம் பழம் 

மாதுளம் பழங்களிலும் அதிக கலோரிகள் மற்றும் சர்க்கரைகள் உள்ளன. மாதுளம் பழத்தை அப்படியே உரித்து சாப்பிடுவதை காட்டிலும் பலர் ஜூஸாக பருகுகின்றனர். இது விரைவான சர்க்கரை உறிஞ்சுதலை ஏற்படுத்தி உடல் எடை அதிகரிப்பை உண்டாக்கும். 

அத்திப்பழம் 

அத்தி பழங்களில் கலோரிகள் மற்றும் இயற்கை சர்க்கரைகள் அதிகம். அதிலும் குறிப்பாக உலர்ந்த அத்திகளில் இன்னும் ஏராளமான கலோரிகள் இருப்பதால் இதனை அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். 

பலாப்பழம் 

100 கிராம் பலாப்பழத்தில் 95 கிலோ கலோரிகள் உள்ளன. பலாப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகள் ஏராளமாக உள்ளது. இதனை அதிகமாக சாப்பிட்டால் இதில் உள்ள அதிக ஆற்றல் அளவு காரணமாக நம்முடைய உடல் எடை அதிகரிக்கலாம். 

எனவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் இந்த மாதிரியான ஆரோக்கியமான பழங்களை சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்க முயற்சி செய்யலாம். அதே சமயத்தில் உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் இப்பழங்களை குறைவாக சாப்பிட பரிந்துரை செய்யப்படுகிறது.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 150

    0

    0