உங்க வீட்டு அஞ்சறைப் பெட்டியில இந்த ஒரு பொருள் இருக்கிற வரைக்கும் ஆஸ்துமா நினைச்சு கவலையே பட வேண்டாம்!!!

Author: Hemalatha Ramkumar
15 அக்டோபர் 2024, 10:40 காலை
Quick Share

“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்று சொல்லப்பட்டதற்கு பின்னணியில் வலிமையான பல காரணங்கள் உள்ளன. நம்முடைய அன்றாட சமையலில் கடுகு பயன்படுத்தப்படுவது ஏன் என்று என்றைக்காவது யோசித்து பார்த்துள்ளீர்களா? குழம்பு, கூட்டு, பொரியல் என்று எல்லா வகையான உணவுகளுக்கும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிப்பது அதன் சுவையை கூட்டிக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் சுவை மட்டுமல்லாமல் கடுகில் பல்வேறு ஆரோக்கிய நலன்களும் மறைந்துள்ளது. இது பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருவது பலருக்கு தெரிவதில்லை. எனவே கடுகை பற்றி நீங்கள் அறியாத பல நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

கடுகு விதைகளில் உணவு நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது நம்முடைய செரிமானத்துக்கு நன்மை தருகிறது. மலத்தை மென்மையாக்கி மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் தருகிறது. செரிமானத்திற்கு அவசியமான நொதிகளை தூண்டுவதன் மூலமாக கடுகு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் உணவு மூலமாக நமக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் சிறந்த முறையில் உறிஞ்சப்படுவதையும் கடுகு உறுதி செய்கிறது. ஒருவேளை நீங்கள் வயிற்று உப்புசம் அல்லது அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை சந்தித்து வந்தால் அதிலிருந்து இயற்கையான நிவாரணம் பெறுவதற்கு கடுகை உங்கள் தினசரி உணவில் பயன்படுத்துங்கள். 

மழைக்காலத்தில் பலருக்கு ஆஸ்துமா அல்லது சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். இதற்கு கடுகு ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது. சுவாச பாதையில் உள்ள வீக்கத்தை குறைத்து, மூச்சு திணறல் மற்றும் ஆஸ்துமா போன்ற அறிகுறிகளை தணிக்கிறது. அதுமட்டுமல்லாமல் கடுகு விதையிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் சுவாசிப்பதை மேம்படுத்தவும், சைனஸ் பிரச்சினைக்கான இயற்கையான தீர்வாக அமைகிறது. 

உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் சருமத்தின் ஆரோக்கியத்திலும் கடுகு முக்கிய பங்கு கொண்டுள்ளது. விதைகளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் முகப்பரு மற்றும் பூஞ்சை தொற்றுகள் போன்ற பல்வேறு விதமான தோல் நிலைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. மேலும் காயங்களை விரைவாக ஆற்றுவதற்கும் கடுகு விதையை பயன்படுத்தலாம். காயங்கள் மீது கடுகு விதை எண்ணெயை தடவுவது வீக்கத்தை குறைத்து தொற்றுகள் ஏற்படுவதை தவிர்க்க உதவும். 

இதையும் வாசிக்கலாமே: ஒரு ரூபா செலவு இல்லாம உங்க தலைமுடிய ஸ்ட்ராங்கா, சாஃப்டா மாத்துவோமா…???

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ள கடுகு விதைகள் நம்முடைய இதயத்திற்கும் நல்லதாக கருதப்படுகிறது. இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதால் நமக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது. அது மட்டுமல்லாமல் கடுகு விதையில் உள்ள மெக்னீசியம் ரத்த அழுத்தத்தை சீராக்கி, இதய செயல்பாட்டை அதிகரிக்கிறது. உங்களுடைய அன்றாட உணவில் கடுகு விதைகளை சேர்த்து வரும்போது உங்களுக்கு இதயம் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக குறைவு. 

இறுதியாக கடுகு விதையில் உள்ள வைட்டமின்கள் A, C மற்றும் K ஆகியவை வலிமையான நோய் எதிர்ப்பு அமைப்பை உருவாக்குகிறது. இந்த ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மிக மோசமான ஃப்ரீ ரேடிக்கல்களுடன் சண்டையிட்டு தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக நமது உடலை பாதுகாக்கிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் அதிகரிக்க உங்களுடைய உணவுகளில் கடுகு விதைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • ரூ.411 கோடி அரசு நிலம் அபேஸ்? அறப்போர் இயக்கம் கைகாட்டும் அமைச்சர்!
  • Views: - 96

    0

    0

    மறுமொழி இடவும்