இந்தப் பழக்கங்களை ரெகுலரா ஃபாலோ பண்றவங்க எப்போதும் இளமையா தெரியுவாங்க!!!

Author: Hemalatha Ramkumar
12 December 2024, 12:53 pm

இன்றைய அதிரவான உலகில் நாம் பின்பற்றி வரும் ஓய்வில்லாத வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள் நம்முடைய சருமத்தை நேரடியாக பாதிக்கிறது. நமக்கு வயதாகும் பொழுது சருமத்தின் இயற்கையான பளபளப்பு மற்றும் நெகிழ்வுத் தன்மை மங்கி, தோலில் சுருக்கங்கள் ஏற்பட்டு, வயதான தோற்றத்தை பெறுவது வழக்கம். ஆனால் இளமையான பொலிவை பெற வேண்டும் என்பது அனைவருடைய ஆசையாக உள்ளது.

அதிர்ஷ்டவசமாக உங்களுடைய அன்றாட வழக்கத்தில் சில சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமாக உங்களுடைய சரும ஆரோக்கியத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சரும ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலமாக வயதாகும் செயல்முறையை மெதுவாக்கி, பளபளப்பான சருமத்தை பெறலாம். தொடர்ச்சியான மற்றும் எளிமையான சில முயற்சிகள் சருமத்தில் உள்ள மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்கும். அப்படி நீங்கள் இளமையாக இருப்பதற்கு உதவும் சில அன்றாட பழக்க வழக்கங்கள் சிலவற்றை பற்றி பார்க்கலாம்.

முக பாவனைகள் 

முகத்தில் நீங்கள் ஏற்படுத்தும் பாவனைகள் சுருக்கங்களை ஏற்படுத்தி வயதாகும் செயல்முறையை விரைவுப்படுத்தலாம். கவனத்துடன் முகபாவனைகளை செய்வது சுருக்கங்கள் உருவாவதை குறைக்கும் முக பாவனைகளை அடிக்கடி செய்யுங்கள். முகத்தில் உள்ள தசைகளுக்கு ஓய்வு கொடுங்கள்.

இதையும் படிச்சு பாருங்க: 

நெல்லிக்காய் சாப்பிடுவதால் பக்க விளைவுகள் கூட ஏற்படுமா…???

தூக்கம் 

போதுமான அளவு ஓய்வு கொடுப்பது சருமத்திற்கு புத்துயிர் கொடுத்து மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்கும். தூக்கத்தின் பொழுது கொலாஜன் உற்பத்தி அதிகமாகும். சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மேம்படும் மற்றும் சேதங்கள் சரி செய்யப்படும். எனவே தினமும் 7 முதல் 8 மணி நேர தரமான இரவு தூக்கத்தை பெற்றிருப்பது அவசியம்.

உடலை நீரேற்றமாக வைப்பது 

அதிக அளவு தண்ணீர் குடிப்பது சருமத்தை குண்டாக வைத்து அதன் நெகிழ்வு தன்மையை பராமரிக்கும். மேலும் நீர்ச்சத்து கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை உறுதியாகவும் மென்மையாகவும் மாற்றும். போதுமான அளவு தண்ணீர் உடலில் உள்ள நச்சு கழிவுகளை அகற்றி, ஆரோக்கியமான செல் வளர்ச்சியை ஊக்குவிக்கும். எனவே மினுமினுப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.

சரிவிகித உணவு

ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கான எரி பொருட்கள். மது அருந்துவதை குறைப்பது நீர்ச்சத்து இழப்பை தடுத்து, வயதாகும் செயல்முறையை மெதுவாக்கும். முழு உணவுகள், பழங்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து நெகிழ்வத்தன்மை மேம்படுத்தி, பொலிவான சருமத்தை பெற உதவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Ajith Kumar Dubai car race victory அரங்கமே அதிர…ஒட்டுமொத்த உலகமே திரும்பி பார்க்க…மகனுடன் மேடையை பகிர்ந்த அஜித்..!