ஆரோக்கியம்

தலைவலி தானேனு அசால்ட்டா இருக்காதீங்க … கண்ணுல இந்த பிரச்சினை இருந்தாக்கூட அப்படி வரலாம்!!!

தலைவலி என்பது அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. இது மன அழுத்தம் முதல் பல்வேறு மருத்துவ நிலைகளின் காரணமாக ஏற்படலாம். ஆனால் தலைவலி கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் காரணமாகவும் வரலாம். கண் தொடர்பான பிரச்சனைகளின் பொழுது எப்போது தலைவலி ஏற்படும் என்பதை புரிந்து கொள்வது பிரச்சினையை கண்டறிவதற்கும், அதற்கான சிகிச்சையை பெறுவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

தலைவலி மற்றும் கண் பிரச்சனைகளுக்கு இடையே உள்ள தொடர்பை புரிந்து கொள்ளுதல் 

கண்கள் என்பது நாள் முழுவதும் அயராது வேலை செய்யக்கூடிய சிக்கலான உறுப்புகள். அவற்றுக்கு அளவுக்கு அதிகமாக அழுத்தம் கொடுத்தாலோ அல்லது வேறு சில பிரச்சனைகளின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தாலோ அதனால் தலைவலி மற்றும் அசௌகரியம் ஏற்படலாம். இது ஆக்குலர் தலைவலி என்று அழைக்கப்படுகிறது. இது பிறவகையான தலைவலிகளை விட சற்று வேறுபட்டதாக இருக்கும்.

தலைவலியை ஏற்படுத்தும் பொதுவான கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் 

கண்களில் அழுத்தம் 

நீண்ட நேரத்திற்கு டிஜிட்டல் ஸ்கிரீன்களை பயன்படுத்துவது, படிப்பது அல்லது வாகனம் ஓட்டுவது போன்றவை கண்களின் தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் நெற்றி, கண் பகுதிகளை சுற்றி வலி உண்டாகும்.

பார்வைத்திறன் சம்பந்தப்பட்ட பிரச்சனை 

கிட்ட பார்வை மற்றும் தூரப்பார்வை போன்ற நிலைகள் இருக்கும் பொழுது ஒரு பொருளை பார்ப்பதற்கு கண்கள் கூடுதலாக சிரமப்பட வேண்டி இருக்கும். இந்த கூடுதல் முயற்சியின் விளைவாக தலைவலி ஏற்படலாம்.

தவறான கண்ணாடிகள் அல்லது காண்டாக்ட் லென்ஸ் 

தவறான பிரிஸ்கிரிப்ஷன் கொண்ட கண்ணாடிகள் அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணிவது கண்களில் அழுத்தத்தை ஏற்படுத்தி, தலைவலியை உண்டாக்கும். எனவே வழக்கமான முறையில் கண் செக்-அப் செய்து உங்களுடைய பிரிஸ்கிரிப்ஷன் அப்டேட் ஆக இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.

டிஜிட்டல் காரணங்கள் 

நீண்ட நேரத்திற்கு டிஜிட்டல் ஸ்கிரீன்களை எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் பயன்படுத்துவது தலைவலியை உண்டாக்கும். இதற்கான அறிகுறிகள் வறண்ட கண்கள், மங்கலான பார்வை மற்றும் கழுத்து வலி.

கிளாக்கோமா 

இந்த நிலையில் கண்களின் உட்புறத்தில் உள்ள அழுத்தம் அதிகமாகி கண்களைச் சுற்றி தீவிரமான தலைவலி உண்டாகும். இந்த நிலையில் மேலும் குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் உண்டாகும்.

கண் தசைகள் சமநிலை இல்லாமல் இருத்தல்

கண்களில் லேசான சமநிலை இல்லாமல் இருந்தால் கூட அதனால் அழுத்தம் உண்டாகி ஒரு பொருளை பார்ப்பதற்கு கண் தசைகள் கடினமாக வேலை பார்க்க வேண்டி இருக்கும். இதனால் அடிக்கடி தலைவலி ஏற்படலாம்.

எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும்?

அடிக்கடி உங்களுக்கு தலைவலி ஏற்பட்டாலோ, உங்கள் கண்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பதாக நீங்கள் சந்தேகித்தாலோ உடனடியாக கண் நிபுணரை அணுக வேண்டும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

1 hour ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

2 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

3 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

3 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

4 hours ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

4 hours ago

This website uses cookies.