வாரத்தில் இரண்டு நாள் மட்டும் இந்த கீரை சாப்பிட்டால் இரத்தம் சுத்தமா இருக்கும்!!!

Author: Hemalatha Ramkumar
2 December 2022, 10:21 am

கீரை வகைகள் என்றாலே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது நமக்கு தெரியும். கீரையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு வகையான கீரையும் ஒவ்வொரு விதமான நன்மைகளை வழங்குகிறது. அந்த வகையில் பொன்னாங்கன்னி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

பொன்னாங்கன்னி கீரைக்கு இரத்தத்தை சுத்தம் செய்யும் பண்புகள் உள்ளது. இதற்கு பொன்னாங்கன்னி கீரையோடு சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து வேக வைத்து கடைந்து மசியல் போல சாப்பிடலாம்.

பொன்னாங்கன்னி கீரையில் ஏராளமான நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கல், வயிற்று உப்புசம், நெஞ்செரிச்சல் போன்ற செரிமான பிரச்சினைகள் வருவதைத் தடுக்க உதவுகிறது. அது மட்டும் இல்லாமல் பொன்னாங்கன்னி கீரையில் பல விதமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் இரும்பு சத்து அடங்கி உள்ளது.

ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டும் இல்லாமல் பொன்னாங்கன்னி கீரை உங்கள் அழகையும் கவனித்துக் கொள்கிறது. எனவே உங்களுக்கு ஆரோக்கியமான சருமம் வேண்டும் என்றால் அடிக்கடி உங்கள் உணவில் பொன்னாங்கன்னி கீரையை சேர்த்து கொள்ளவும். சுருக்கங்கள் போன்ற வயதான அறிகுறிகளைக் குறைப்பதில் பொன்னாங்கன்னி கீரை பெரும் பங்கு வகிக்கிறது.

மேலும் தெளிவான கண்பார்வையைப் பெற பொன்னாங்கன்னி கீரை சிறந்தது. இந்த கீரையை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தாலே மூளையை புத்துணர்ச்சியாக வைப்பதோடு, இதய ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளும்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!