செரிமான பிரச்சனை வந்தாலே உங்களுக்கு முதலில் ஞாபகத்திற்கு வர வேண்டியது இந்த பொருள்தான்!!!

Author: Hemalatha Ramkumar
25 December 2024, 2:13 pm

பெருங்காயம் என்ற வலிமையான மசாலா பொருள் பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது அதிலும் குறிப்பாக செரிமான பிரச்சனைகளுக்கு இது ஒரு அற்புதமான வீட்டு வைத்தியம் ஆயுர்வேதம் மற்றும் யுனானி போன்ற பாரம்பரிய சிகிச்சைகளில் பெருங்காயம் அதன் செரிமான நன்மைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது பெருங்காயத்தில் உள்ள வீக்கை எதிர்ப்பு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வயிற்று உப்புசம் அஜீரணம் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளுக்கு மருந்தாக அமைகிறது.

பெருங்காயத்தின் மருத்துவ பண்புகள் வாயுவை வெளியேற்றி மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சினையால் ஏற்படும் அசௌகரியத்தை போக்குவதன் மூலமாக ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு உதவுகிறது எனவே குறிப்பாக குளிர்காலத்தில் செரிமானத்தை மேம்படுத்தவும் உங்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவும் பெருங்காயத்தை அன்றாட உணவில் ஏன் சேர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்களை பற்றி பார்க்கலாம்.

வயிற்று உப்புசத்தை போக்குகிறது 

பெருங்காயம் என்பது வாயு மற்றும் வயிற்று உப்புசத்திற்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது இது அசோகரியத்தை போக்கி வாயு அதிகமாக சேராமல் கவனித்துக் கொண்டு குடல் வழியாக வாயுக்கள் வெளியேற்றப்படுவதை உறுதி செய்கிறது.

செரிமானம் 

நெஞ்செரிச்சல் மற்றும் அமில ரிப்ளக்ஸ் போன்ற அஜீரணம் பிரச்சனையால் ஏற்படும் பக்க விளைவுகள் அசௌகரியத்தை ஏற்படுத்தி செரிமான செயல்முறையை மெதுவாகும் பெருங்காயத்தை பயன்படுத்துவது செரிமான அமைப்பின் செயல்பாட்டை சுமூகமாக்கி வயல் மற்றும் கேஸ்ட்ரிக் சாறுகள் உற்பத்தியை தூண்டுவதன் மூலமாக நாம் சாப்பிடும் உணவை உடைத்து செரிமானத்தை விரைவுப்படுத்துகிறது.

நெஞ்செரிச்சல்

பெருங்காயத்தில் உள்ள வீக்கம் எதிர்ப்பு பண்புகள் வயிற்றில் ஓரங்களை ஆற்றி எரிச்சலை போக்கி அளவுக்கு அதிகமான வயிற்று அமிலம் உற்பத்தியாகாமல் கவனித்துக் கொள்வதன் மூலமாக நெஞ்செரிச்சல் பிரச்சனையை தடுக்கிறது.

இதையும் படிச்சு பாருங்க:  முள்ளங்கி இலைகளை யூஸ் பண்ணாம தூக்கி எறிந்தால் உங்களுக்கு தான் பெரிய லாஸ்!!!

செரிமான சமநிலை

ஆரோக்கியமான செரிமானம் என்பது குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் சமநிலையை பொறுத்து அமையும் அதே நேரத்தில் இது தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடி குடலின் சமநிலையை பாதுகாக்கிறது.

மலச்சிக்கல் 

குடலை தூண்டுவதன் மூலமாக உணவை செரிமான பாதையை நோக்கி கொண்டு செல்லும் தசைகளை சுருங்க செய்கிறது பெருங்காயத்தின் மலமிளக்கும் விளைவுகள் மலத்தை மென்மையாக்கி கஷ்டமில்லாமல் மலம் கழிப்பதற்கு உதவுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ