இந்த யோகாசனத்தை தினமும் செய்து வந்தால் மூட்டு வலி பற்றிய கவலை இல்லாமல் இருக்கலாம்!!!
Author: Hemalatha Ramkumar23 October 2022, 10:21 am
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், ஒரு இடத்தில் உட்கார்ந்து நம்மைப் பற்றி சிந்திக்க கூட நேரம் கிடைப்பதில்லை. வேலைப்பளுவானது நம்மை பல நோய்களுடன் நகரும் இயந்திரமாக மாற்றியுள்ளது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளாமல், மூட்டுவலியால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. கழுத்து, முதுகு மற்றும் முழங்கால் வலி பலருக்கு வேலையில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், உங்கள் வாழ்க்கைமுறையில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமும், தினமும் யோகா பயிற்சி செய்வதன் மூலமும் இதனை திறம்பட குணப்படுத்த முடியும். யோகா ஆசனங்களின் வழக்கமான பயிற்சி முதுகு வலி, கழுத்து வலி மற்றும் மூட்டு வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற உதவும். பிராணயாமம் மற்றும் வீட்டு வைத்தியம் ஆகியவை உடலில் உள்ள அனைத்து வகையான வலிகளிலிருந்தும் விடுபட உதவும்.
மூட்டு வலியைப் போக்க பிராணாயாமம்:
பிராணயாமம் உடலில் சரியான இரத்த ஓட்டத்தை பராமரிக்கிறது. இது நமது உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. சூரிய நமஸ்காரத்துடன் உங்கள் நாளைத் தொடங்கவும். பின்னர் கபால்பதி மற்றும் பாஸ்த்ரிகா போன்ற பிராணயாமாக்களைச் செய்யவும். அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை கபாலபதி செய்யலாம்.
மூட்டு வலிக்கு வீட்டு வைத்தியம்:
*வைட்டமின் டி குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்க ஒருவர் தினமும் 1 மணி நேரம் சூரிய ஒளியில் உட்கார வேண்டும்.
*கால்சியம் குறைபாட்டை போக்க பால், தயிர், மோர் மற்றும் பிற பால் பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
*முதுகுவலியால் அவதிப்பட்டால் மஞ்சள், வெந்தயம், உலர் இஞ்சி ஆகியவற்றை அரைத்து பொடி செய்து கொள்ளவும். இதனை இரவில் ஊறவைத்து, இரண்டாவது நாள் காலையில் சாப்பிடுங்கள்
* மூட்டுவலியைப் போக்க, கற்றாழை, கீரை ஆகியவற்றை உட்கொள்ளவும்.
*பாரிஜாதம் மற்றும் சோற்றுக்கற்றாழையின் கஷாயத்தை குடிக்கவும். இதனால் உங்கள் உடலில் வெப்பம் குறையும்
*எலும்புகளை வலுப்படுத்த ஆளி விதையைப் பயன்படுத்துங்கள்
*முளைக்கட்டிய வெந்தயம், வேர்க்கடலை, கொண்டைக்கடலை மற்றும் தானியங்களை உங்கள் உணவில் சேர்க்கவும்.
0
0