தினம் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ்: அழகும் ஆரோக்கியமும் ஒரே டைம்ல!!!

Author: Hemalatha Ramkumar
21 September 2024, 5:22 pm

செக்கசெவேலென்று பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும் பீட்ரூட் நமது உடல் ஆரோக்கியத்திற்கு எக்கச்சக்கமான பலன்களை அளிக்கிறது. முழுக்க முழுக்க அத்தியாவசிய வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த பீட்ரூட் நமது உடல் நலனுக்கு மிகப்பெரிய நன்மைகளை அளிக்கிறது. தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் நமது உடலில் நைட்ரிக் ஆக்சைடு ஆக மாற்றப்பட்டு இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது. மேலும் இந்த நைட்ரிக் ஆக்சைடு ரத்த நாளங்களை விரிவடைய செய்து அதன் விளைவாக ரத்த அழுத்தம் சீராக்கப்படுகிறது. தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது சிஸ்டாலிக் ரத்த அழுத்தத்தை குறிப்பிடத்தக்க வகையில் குறைக்கும் என்று ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்துவதற்கான முக்கியமான ஒரு காரணி. எனவே ஆரோக்கியமான இதயம் வேண்டுமென்று நினைப்பவர்கள் நிச்சயமாக இந்த பீட்ரூட் ஜூஸை கருத்தில் கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க: செக்க சிவந்த மினுமினுப்பான சருமத்திற்கு பீட்ரூட் சாப்பிட்டாலே போதும்!!!

பீட்ரூட் ஜூஸ் என்பது இதயத்திற்கு மட்டுமல்ல பீட்ரூட்டில் உள்ள நைட்ரைட்டுகள் தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து அதன் மூலமாக உடற்பயிற்சியின் போது அவற்றுக்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. இதனால் ஸ்டாமினா அதிகரித்து சோர்வு குறையும்.

பீட்ரூட் ஜூஸ் குடிப்பது நமது அறிவுத்திறன் செயல்பாட்டை மேம்படுத்தி மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து இதனால் ஞாபக சக்தி மற்றும் கவனம் மேம்படுத்தப்படுகிறது. ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள் நிறைந்த பீட்ரூட் நாள்பட்ட வீக்கத்திற்கு எதிராக பாதுகாக்கிறது. 

பீட்ரூட் ஜூஸில் கல்லீரலை ஆதரிக்கும் பண்புகள் உள்ளது. உடலில் உள்ள கழிவுகளை அகற்றி ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களிப்பதன் மூலமாக கல்லீரல் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது. 

பீட்ரூட்டில் உள்ள போலேட் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நமது நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்பெற செய்து பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிக்கிறது. 

பீட்ரூட் ஜூஸில் நார்ச்சத்து இருப்பதால் இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவித்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

பீட்ரூட் ஜூஸ் குடிப்பது வயிறு நிரம்பிய உணர்வு அளித்து பிற உணவுகள் சாப்பிடுவதை குறைப்பதால் இது உடல் எடை கட்டுப்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. 

தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாமா? 

பீட்ரூட் ஜூஸ் நமக்கு எக்கச்சக்கமான பலன்களை அள்ளித் தந்தாலும் அதனை மிதமான அளவு குடிப்பது நல்லது. ஒரு நாளைக்கு 250ml பீட்ரூட் ஜூஸ் குடிப்பது போதுமானது. ஒருவேளை நீங்கள் புதிதாக பீட்ரூட் ஜூஸ் குடிக்க ஆரம்பிக்க போகிறீர்கள் என்றால் சிறிய அளவு பீட்ரூட் ஜூஸை தண்ணீரில் கரைத்து குடிப்பது எந்த விதமான வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க உதவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Ajith racing and movies நடிப்பிற்கு bye bye …அஜித் எடுத்த திடீர் முடிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
  • Views: - 196

    0

    0