ஆரோக்கியத்தையும் கொடுத்து அழகையும் மேம்படுத்தும் கொத்தமல்லி சாற்றை மிஸ் பண்ணிடாதீங்க!!!
Author: Hemalatha Ramkumar5 November 2024, 11:11 am
நம் அனைவரது வீட்டு சமையலறையிலும் கட்டாயமாக மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்கள் இருக்கும். அந்த பட்டியலில் கொத்தமல்லிக்கு நிச்சயமாக ஒரு இடம் உண்டு. கொத்தமல்லி தழை நமக்கு பல ஆரோக்கிய நலன்களை அளிக்கிறது. இது நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பல நன்மைகளை கொண்டுள்ளது. கொத்தமல்லியில் காணப்படும் ஒரு முக்கியமான காம்பவுண்டான லினலூல் என்பது அதன் வாசனை மற்றும் மருத்துவ குணங்களுக்கு காரணமாகிறது. அது மட்டுமல்லாமல் கொத்தமல்லியில் வீக்க எதிர்ப்பு நுண்ணுயிரி எதிர்ப்பு ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் அமைதியூட்டும் விளைவுகள் காணப்படுகிறது. சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் சரிவிகித உணவின் ஒரு பகுதியாக கொத்தமல்லி சாற்றை நீங்கள் குடித்து வருவதால் கிடைக்கும் பலன்கள் யாவை என்பது பற்றி பார்க்கலாம்.
ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகள் தூண்டப்பட்டு வயிற்று உப்புசம், வாயு தொல்லை மற்றும் அஜீரணம் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.
உடலில் உள்ள கன உலோகங்கள் மற்றும் நச்சுகள் ஆகியவற்றை வெளியேற்றுகிறது.
வீக்க எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக முகப்பருக்களை குறைத்து மினுமினுப்பான தோலை தருகிறது.
இதில் உள்ள அதிக வைட்டமின்கள் A, C மற்றும் K ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
ப்ரீ டயாபடீஸ் மற்றும் இன்சுலின் உணர்திறன் இருப்பவர்கள் ரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்துவதற்கு கொத்தமல்லி சாறு பருகலாம்.
கொலஸ்ட்ராலை குறைத்து, உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்து, இதய ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது.
நம்முடைய உடலில் நடைபெறும் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி செரிமானத்தை தூண்டுவதால் இது மறைமுகமாக உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது.
தூக்கமின்மை மற்றும் தூக்க கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி கொடுக்கிறது.
ஆர்த்ரைட்டிஸ், தசைவலி மற்றும் பொதுவான வீக்கம் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் கொத்தமல்லி சாற்றை குடித்து வந்தால் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
எனினும் கொத்தமல்லி சாறு பருகுவதால் ஏற்படக்கூடிய சில பக்கவிளைவுகள் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அலர்ஜி
இது ஒரு சில நபர்களில் தோலில் தடிப்புகள், மூச்சு விடுவதில் சிக்கல், வயிற்றில் அசௌகரியம் போன்ற அலர்ஜிகளை தூண்டலாம்.
ரத்த அழுத்தம் குறைதல்
ஏற்கனவே குறைவான இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அல்லது உயர் ரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுத்த வருபவர்கள் தினமும் கொத்தமல்லி சாறு குடித்து வந்தால் ரத்த அழுத்தம் ஆபத்தான அளவுக்கு குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.
அதிகப்படியான நச்சு நீக்கம்
தினமும் இதனை ஒரு நச்சு நீக்கியாக பயன்படுத்துவது உடலில் உள்ள அத்தியாவசிய மினரல்கள் அல்லது எலக்ட்ரோலைட்டுகளை வெளியேற்றி விடலாம். எனவே தினமும் கொத்தமல்லி சாறு குடிப்பது பரிந்துரைக்கப்படவில்லை.
இதையும் படிக்கலாமே: உங்க கண்களுக்கு வயசாகாமல் இருக்க நீங்க செய்ய வேண்டியது!!!
சிறுநீரக செயல்பாடு கொத்தமல்லியானது சிறுநீரகங்களை தூண்டி அது அதிக தண்ணீர் மற்றும் உப்பை வெளியேற்றுவதற்கு தூண்டலாம். அளவுக்கு அதிகமாக சிறுநீரகத்திற்கு வேலை கொடுத்து எலக்ட்ரோலைட் சமநிலையின்மையை உருவாக்க வாய்ப்புள்ளது.
கொத்தமல்லி சாறு தயார் செய்வதற்கான ரெசிபி:
இதனை செய்வதற்கு நமக்கு ஒரு கப் ஃபிரெஷ் ஆன கொத்தமல்லி தழை, ஒரு கப் நறுக்கிய அன்னாசி பழம், ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு இன்ச் அளவு இஞ்சி, ஒரு கப் தேங்காய் தண்ணீர் அல்லது வழக்கமான தண்ணீர் மற்றும் ஐஸ் கியூப் தேவைப்படும்.
இப்போது கொத்தமல்லி தழை, அன்னாசி பழம், இஞ்சி மற்றும் தேங்காய் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் வடிகட்டிக் கொள்ளலாம். இதில் எலுமிச்சை சாறு சேர்த்து ஐஸ் க்யூப் கலந்து குளிர்ந்த நிலையில் பருகுங்கள்.