எலும்புகளுக்கு வலுசேர்க்க பசும்பாலில் இந்த பொருளை கலந்து தினமும் குடிங்க!!!.

Author: Hemalatha Ramkumar
16 June 2023, 4:57 pm

நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் ஒவ்வொரு விஷயத்தையும் நாம் தேடி தேடி செய்வதுண்டு. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அன்றாடம் சாப்பிடுகிறோம். பழங்கள், காய்கறிகள், நட்ஸ், விதைகள், சிறுதானியங்கள், முளைகட்டிய பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுகிறோம். இன்னும் சிலருக்கு இரவில் பால் குடிக்கும் பழக்கம் உண்டு. ஒரு சிலர் பாலில் மஞ்சத்தூள் கலந்து பருகுவார்கள். ஆனால் பாலில் நெய் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் பசு நெய் கலந்து குடிப்பது செரிமானத்தை மேம்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பாலில் நெய் கலந்து பருகும்பொழுது வயிறு தொடர்பான எந்த பிரச்சனைகளும் நமக்கு நேராது. மலச்சிக்கல் பிரச்சனையினால் தொடர்ந்து அவதிப்பட்டுபவர்கள் பசும்பாலில் பசு நெய்யை சேர்த்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

பாலில் நெய் கலந்து குடிக்கும் போது உடல் வலிமை அதிகரிக்கிறது. இதனை தினமும் குடித்து வரும் பொழுது உங்களால் வழக்கத்தை விட அதிக நேரம் வேலை செய்ய முடியும். தசைகளின் வலிமை அதிகரிக்கிறது. மேலும் எலும்புகள் வலுப்பெறுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பாலில் நெய் கலந்து குடிக்கலாம். அதோடு இந்த கலவை நமது குடலுக்கும் அதிக நன்மைகளை சேர்கிறது. வயிற்றில் ஏதேனும் எரிச்சல் இருக்குமாயின் அதனை நீக்க பாலில் நெய் கலந்து பருகலாம்.

மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற பாலில் நெய் கலந்து குடிக்கலாம். இவ்வாறு தினமும் குடுத்து வரும் பொழுது நாளடைவில் மூட்டு வலி இல்லாமல் போகிறது. நெய்யில் காணப்படும் ஒமேகா 3 மற்றும் ஒமேகாசி கொழுப்பு அமிலங்களும் பாலில் உள்ள கால்சியங்களும் சேர்ந்து எலும்புகளை பலப்படுத்துகிறது.

கர்ப்பிணி பெண்கள் தினமும் காலில் நெய் கலந்து குடித்து வர அவர்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இது தாய்க்கு மட்டுமின்றி வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆரோக்கியத்தை சேர்க்கிறது. எனினும் இதனை பருகுவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…