சுலபமாக கொலஸ்ட்ராலை குறைக்க தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்க!!!
Author: Hemalatha Ramkumar22 April 2023, 5:27 pm
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது என்ற பழமொழியை நாம் அனைவரும் சிறு வயதில் இருந்தே அறிவோம். ஆப்பிள் பழங்களில் காணப்படும் அதிகப்படியான சத்துக்கள் காரணமாவே இது சொல்லப்பட்டது. ஆப்பிள் பழத்தில் பெக்டின் என்ற இயற்கை நார்ச்சத்து உள்ளது. பெக்டின் நிறைந்த முழு ஆப்பிளை சாப்பிடுவது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
ஆப்பிள்களில் நார்ச்சத்து உள்ளது. மேலும் இது குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) கொண்டுள்ளது. மேலும் ஆப்பிள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவும். இது எடை மேலாண்மை மற்றும் நீரிழிவு நோயைத் தடுப்பது ஆகிய இரண்டிற்கும் முக்கியமானது.
ஆப்பிளில் இருந்து எடுக்கப்படும் பெக்டின் குடல் நுண்ணுயிரியை (நன்மை தரும் குடல் பாக்டீரியா) கட்டுப்படுத்த உதவும் என்று விலங்கு ஆய்வுகள் காட்டுகின்றன. இது உடல் பருமன் மற்றும் பிற அழற்சி கோளாறுகளைத் தடுக்க உதவும்.
ஆப்பிள்களில் பாலிபினால்கள் நிறைந்துள்ளன. அவற்றில் ஒன்று குர்செடின் எனப்படும் ஃபிளாவனாய்டு. அதிக குர்செடின் அளவு உள்ளவர்களுக்கு இதய நோய் மற்றும் ஆஸ்துமா உட்பட பல நாள்பட்ட நோய்களின் ஆபத்து குறைவாக இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது அதிக எலும்பு அடர்த்தி மற்றும் மேம்பட்ட எலும்பு ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆப்பிள்கள், உடலில் இருந்து இழக்கப்படும் கால்சியத்தின் அளவைக் குறைக்க உதவும். எனவே இது எலும்புகளின் வலிமையை மேம்படுத்துகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.