உணவுக்குப் பின் இவ்வாறு செய்தால், நோயின்றி வாழ வாய்ப்புள்ளதா!
Author: Hemalatha Ramkumar3 March 2023, 7:29 pm
நோயற்ற வாழ்வு என்பது நம் அனைவரின் கனவாகும். இது கனவாக மட்டும் இல்லாமல் உண்மையில் நாம் நோயற்று வாழ வேண்டும் என்று எண்ணினால் அதற்கு ஒரு சில பழக்க வழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும். உணவுக்குப் பின் பின்வரும் இந்த குறிப்புகளை நாம் பின்பற்றினால் நம்மால் நோயற்று வாழ முடியும்:
பொதுவாக முன்பெல்லாம் உணவு சாப்பிட்ட பின் வெற்றிலை சாப்பிடும் பழக்கம் இருந்தது. அது நம் ஆரயோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வெற்றிலையை பாக்கு மற்றும் சுண்ணாம்பு சேர்த்து உணவுக்குப் பின் சாப்பிட்டால், அது உணவு எளிதில் செரிப்பதற்கு உதவியாக இருக்கும். அது மட்டும் இல்லை, இதில் நாம் சேர்க்கும் பாக்கு சளி போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட உதவுகிறது. சுண்ணாம்பில் எலும்புகளுக்கு வலி சேர்க்கும் திறன் உள்ளது. அதோடு குடல் சார்ந்த நோய்களைப் போக்க உதவுகிறது.
உணவு எடுத்துக் கொண்ட பின்னர் வெது வெதுப்பான தண்ணீர் குடிப்பதும் நல்லது. இது உணவில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும். கொழுப்பைக் கரைக்க அந்த வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது கருப்பட்டி சேர்த்து கரைத்துக் குடிக்கலாம்.
தொண்டையில் ஏதேனும் புண் இருந்தால் நாம் அந்த தண்ணீரில் துளசி இலைகளைப் போட்டு குடிக்கலாம். இவ்வாறு தினமும் குடித்தால், தொண்டைப் புண் சரி ஆகிவிடும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் பலப்படும்.
பல் வலி இருந்தால் உணவு சாப்பிட்ட பின்னர், துளசி இலை உடன் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து, வலி உள்ள இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அழுத்தி வைத்தால், வலி குணமடையும்.
இது மட்டும் அல்லாமல் யோகா, உடற்பயிற்சி போன்றவை நாம் நோயின்றி வாழ்வதற்கு பக்க பலமாக இருக்கும். நம் அனைவருக்கும் ஆரோக்கியமே பிராதானம் என்பதால், அதனை பேணி பாதுகாப்பதில் கவனம் செலுத்து நாம் இந்த எளிய குறிப்புகளை நாம் முயற்ச்சி செய்து பார்க்கலாமே.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.