வழக்கமாக நமக்கு ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கும் கேரட்டுகள் பற்றி மட்டுமே நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் கருப்பு நிற கேரட்டுகளும் இயற்கையின் படைப்புதான். இந்த கேரட்டுகள் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கான பல நன்மைகளைக் கொண்டுள்ளன. ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிலும் குறிப்பாக அந்தோசயானின்கள் நிறைந்த கருப்பு கேரட் ஃப்ரீ ரேடிக்கல்களோடு சண்டையிட்டு, நாள்பட்ட நோய்களுக்கான அபாயத்தை குறைக்கிறது. மேலும் நம் உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின் A மற்றும் நார்ச்சத்து போன்ற வைட்டமின்களையும், மினரல்களையும் வழங்குகிறது. வைட்டமின் A என்பது பார்வை திறனை மேம்படுத்துகிறது. அதே நேரத்தில் நார்ச்சத்து நல்ல செரிமானத்தை ஊக்குவிக்கிறது.
வழக்கமான முறையில் கருப்பு நிற கேரட்டுகளை சாப்பிடும் பொழுது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, தெளிவான சருமம் கிடைத்து, ரத்த சர்க்கரை அளவுகள் சீராக பராமரிக்கப்படும். எனவே இந்த குளிர் காலத்தில் வழக்கமான ஆரஞ்சு நிற கேரட்டுகளுக்கு பதிலாக கருப்பு கேரட்டுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
செரிமானம்
கருப்பு நிற கேரட்டுகள் இயற்கையான உணவு நார்ச்சத்தின் சிறந்த மூலமாக அமைகிறது. இந்த நார்ச்சத்து செரிமானத்தை சுமூகமாக நடைபெற செய்து, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
ஆன்டி-ஆக்சிடன்ட்கள்
கருப்பு கேரட்டுகளில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகமாக காணப்படுகிறது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைத்து, உடலில் வீக்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
கருப்பு கேரட்டில் ஆரஞ்சு கேரட்டை விட அதிக அளவு சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது. வைட்டமின் K ரத்த உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமானது மற்றும் வைட்டமின் A தெளிவான பார்வைக்கும், மினுமினுக்கும் சருமத்தையும் தருகிறது.
இதையும் படிக்கலாமே: எல்லா வகையான சாதத்துக்கும் செம காம்பினேஷனா இருக்குற கத்திரிக்காய் ஃபிரை ரெசிபி!!!
இதய ஆரோக்கியம்
கருப்பு கேரட்டுகளில் நிறைந்திருக்கும் அந்தோசயானின்கள் என்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நேரடியாக நம்முடைய இதய ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை. இது இதய நோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, ரத்த அழுத்தத்தை குறைப்பதன் மூலமாக இதயத்தை கவனித்துக் கொள்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில்…
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
This website uses cookies.