ஆரோக்கியம் பற்றிய கவலை இல்லாமல் இருக்க தினம் ஒரு கேரட்…!!!

Author: Hemalatha Ramkumar
15 April 2023, 5:54 pm

கோடை காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் நம் உணவில் சேர்த்து சாப்பிடுவது பலவிதமான நோய்களிலிருந்து நம்மை காப்பாற்ற உதவும். கோடை காலத்தில் தர்பூசணி, இளநீர், நுங்கு, மோர் போன்றவை பெரும்பாலும் உண்ணப்படுதிறது. ஆனால் கோடைகால நோய்களில் இருந்து தப்பிக்க கேரட் உதவக்கூடும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம், உண்மைதான்.

ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய கேரட்டை குறிப்பாக கோடை மாதங்களில் சாப்பிடுவது கோடைகால பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. கேரட்டில் ஆன்ட்டி ஆக்சிடன்டுகள் அதிக அளவில் உள்ளன. செல் சேதங்களை ஏற்படுத்தக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக ஆன்டி-ஆக்சிடன்டுகள் செயல்படுகின்றன.

மேலும் சூரியனில் இருந்து வெளிவரும் வெப்பத்திலிருந்து நம் உடலை பாதுகாக்க கூடிய சக்தி கேரட்டிற்கு உண்டு. கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிக அளவில் காணப்படுகிறது. இது நமது உடலில் வைட்டமின் ஏ ஊட்டச்சத்தாக மாற்றப்படுகிறது.

வெப்பநிலை தாறுமாறாக உயர்த்துவரும் சமயத்தில் நமக்கு நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். கேரட் நீர்ச்சத்தின் சிறந்த ஆதாரமாக அமைவதால் தினமும் ஒன்றிரண்டு கேரட் சாப்பிடுவது நமக்கு போதுமான அளவு நீர் சத்தை தர உதவுகிறது. அது மட்டுமல்லாமல் சருமம், செரிமானம் மற்றும் உடல் வெப்பநிலையை பராமரிக்கவும் கேரட் உதவுகிறது.

கோடை காலத்தில் பிள்ளைகளுக்கு விடுமுறை என்பதால் பலரும் வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இவ்வாறு வெளியில் செல்லும் பொழுது வைரஸ்கள் மற்றும் கிருமிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது அவசியம். அந்த வகையில், தினமும் கேரட் சாப்பிடுவது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

கேரட்டில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான பிரச்சனைகளான மலச்சிக்கல், வயிற்று உப்புசம், நெஞ்செரிச்சல் போன்றவைகளை தடுக்க உதவுகிறது. கோடை வெயிலிலிருந்து சருமத்தை பாதுகாப்பது ஒரு பெரிய வேலை தான். தினமும் கேரட் சாப்பிடுவது ஆரோக்கியமான சருமத்தை பெற உதவுகிறது. கேரட்டில் காணப்படும் பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ ஆக மாற்றப்பட்டு சருமத்தின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது. அது மட்டுமல்லாமல் UV கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகளையும் குறைக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்! 
  • Close menu