செரிமானத்தை மேம்படுத்தி உடலை சுத்தமாக வைக்கும் கொண்டைக்கடலை!!!

Author: Hemalatha Ramkumar
7 June 2023, 1:00 pm

கொண்டைக்கடலையில் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பெருமளவில் உள்ளது. 100 கிராம் அளவுள்ள கொண்டைக்கடலையில் சுமார் 365 கலோரிகள் அடங்கியுள்ளது. மேலும்
கொழுப்பு 6 கிராம்,
பொட்டாசியம் 1 கிராம்,
சோடியம் 25 மில்லி கிராம்,
கார்போஹைட்ரேட் 60 கிராம், நார்ச்சத்து 17 கிராம், சர்க்கரை 11 கிராம்,
புரதம் 20 கிராம்,
விட்டமின் சி 1.2 கிராம்,
கால்சியம் 2 கிராம்,
இரும்புச்சத்து 7 கிராம்,
விட்டமின் பி6 5 கிராம்,
மெக்னீசியம் 6 கிராம்
ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

இந்த சத்துக்கள் அனைத்தும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடியவை. எனவே தினமும் கொண்டைக்கடலை உண்பதால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே காண்போம்.

கொண்டைக்கடலையில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. இது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை உயர்த்துகிறது. இதனால் தொடர்ந்து கொண்டக்கடலை சாப்பிட்டு வருவதால் இரத்தசோகை நோய் முற்றிலும் குணப்படுத்தப்படுகிறது. மேலும் இது இரத்தத்தின் உற்பத்தியை அதிகரிக்கிறது. எனவே கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொண்டைக்கடலை மிகவும் நல்லது.

கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான உறுப்புகளை பலப்படுத்தி ஜீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. கொண்டைக்கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணப்படுத்தப்படுகிறது.

கொண்டைக்கடலையில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் நியூட்ரியன்கள் உள்ளன. இது இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதிலுள்ள மினரல்கள் இரத்தம் கட்டுதலை தடுக்க உதவுகிறது. மேலும் இதய தசைகளை வலுப்படுத்தி இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது.

கொண்டைக் கடலையில் இருக்கும் செலினியம் மற்றும் நார்ச்சத்து கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.
இதில் இருக்கும் வைட்டமின் சி ஆன்டி ஆக்ஸிடன்டாக செயல்படுகிறது. இதில் இருக்கும் நியூட்ரியன்ட்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் பெண்களுக்கு வரக்கூடிய மார்பக புற்று நோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

உணவில் கொண்டைக்கடலையை சேர்த்து கொள்வதால் நினைவுத்திறன் அதிகரிக்கிறது. கொண்டைக்கடலையில் இருக்கும் கோலின் (Choline) சத்து மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. கொண்டைக்கடலையை மூல நோய் மற்றும் வாத நோய் உள்ளவர்கள் அதிகம் உண்பதை தவிர்ப்பது நல்லது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 389

    0

    0