நம்மில் பெரும்பாலானோருக்கு தேங்காய்ப் பூ பற்றி தெரியும். சிலரே அதனை ருசித்து பார்த்திருப்பர். மேலும் மிகச் சிலருக்கே அதன் நன்மைகள் குறித்து தெரியும். இந்த பதிவில் தேங்காய்ப் பூ சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம். தேங்காயிலிருந்து வளரும் கருவே தேங்காய்ப் பூ எனப்படுகிறது. இளநீர் மற்றும் தேங்காயைக் காட்டிலும் தேங்காய்ப் பூவில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.
தேங்காய்ப் பூவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளது. இதனால் இதனை மழைக்காலத்தில் சாப்பிட்டு வந்தால் பருவகால தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். இரத்தத்தில் இன்சுலின் சரப்பதை தூண்டி அதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். இதயத்தில் கொழுப்பு படியாமல் பாதுகாக்கிறது. கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது. இதனால் தேங்காய்ப் பூ இதயத்தின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது.
மன அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் வேலை காரணமாக உணவு சாப்பிட முடியாமல் இருப்பவர்கள் தேங்காய்ப் பூவை சாப்பிட உணவு சாப்பிட்ட பலம் கிடைக்கும். தேங்காய்ப் பூ செரிமான சக்தியை அதிகரிக்கும். மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளிக்கிறது. குடலை பாதுகாக்க உதவும் வைட்டமின் மற்றும் புரதம் தேங்காய்ப் பூவில் உள்ளது.
தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துவதன் மூலம் தைராய்டு பிரச்னையை போக்குகிறது.
புற்றுநோய் வராமல் பாதுகாக்கும் தன்மை தேங்காய் பூவிற்கு உண்டு. இது குறைந்த கலோரி உணவு என்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்தது. பத்து கிலோ மீட்டர் நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன் தேங்காய் பூ சாப்பிட கிடைக்கும். முன்கூட்டியே தோன்றும் வயதான அறிகுறிகளை தாமதப்படுத்தும். தேங்காய் பூ சாப்பிட இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.