நார்ச்சத்து அதிகமா சாப்பிட்டா இதெல்லாம் நடக்குமா…???

Author: Hemalatha Ramkumar
10 October 2024, 6:12 pm

நீங்கள் அதிக நார்ச்சத்து சாப்பிட ஆரம்பித்தால் உங்களுடைய உடலில் என்னென்ன மாற்றம் ஏற்படும் என்று என்றைக்காவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? இந்த மாற்றம் சிறியதாக இருக்கலாம். ஆனால் இது உங்களுடைய ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் அதிக அளவு நார்ச்சத்து சாப்பிட வேண்டும் என்பதை பலர் அறிவோம். ஆனால் அது ஏன் மற்றும் அதில் நம்மை எப்படி பாதிக்கிறது என்பதை மிகச் சிலரே புரிந்து கொள்கிறோம். 

செரிமானம் முதல் ஆற்றல் அளவுகள் வரை நார்ச்சத்து அதிகமாக எடுத்துக் கொள்வதால் நமது உடலில் பல்வேறு விதமான மாற்றங்கள் நடைபெறுகிறது. தினமும் அதிக நார்ச்சத்தை எடுத்துக் கொள்வது நமது உடலில் குறைந்த மற்றும் நாள்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். குறைந்த அல்லது உடனடி தாக்கங்களை பற்றி பேசும் பொழுது குறிப்பாக கரையும் நார்ச்சத்து இரைப்பை குடல் பாதையை சீராக்கி, நமக்கு வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கும் ஹார்மோன்களை வெளியிடுகிறது. இதனால் நீண்ட நேரத்திற்கு நீங்கள் வயிறு நிரம்பிய உணர்வோடு இருப்பீர்கள். 

மேலும் படிக்க: நீங்க தினமும் சாப்பிடற உணவு இப்படித்தான் இருக்கணும்.. அறிவுரை கூறும் உலக சுகாதார மையம்!!!

நீரில் கரையாத நார்ச்சத்தானது மலத்தோடு இணைந்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க உதவுகிறது. கரையும் நார்ச்சத்து ஜெல் போன்ற ஒரு மேட்ரிக்ஸ் உருவாக்கி குளுக்கோஸ் சிறுகுடலில் பொறுமையாக உறிஞ்சப்படுவதை ஊக்குவிக்கிறது. இதனால் ரத்த குளுக்கோஸ் அளவுகள் பொறுமையாக அதிகரிக்கும். இது டயாபடீஸ் அல்லது இன்சுலின் எதிர்ப்பு திறன் கொண்டவர்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது. நீரில் கரையும் நார்ச்சத்து குடலில் உள்ள பைல் அமிலங்களோடு பிணைந்து கழிவுகள் வெளியேற்றப்படுவதை திறம்பட செய்கிறது மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்து இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. 

நார்ச்சத்து என்பது ப்ரீபயாடிக் போல செயல்பட்டு குடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு தேவையான போஷாக்கை வழங்குகிறது. இதனால் குடல் நுண்ணுயிரிகளின் சமநிலை பராமரிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படுகிறது. மேலும் வீக்கம் குறைந்து, மன நலன் மேம்படுகிறது. முழு தானியங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அதிக நார்ச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது கோலோரெக்டல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும். 

நார்ச்சத்து சாப்பிடுவதை அதிகரிக்க உதவும் சில குறிப்புகள் 

*முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பீன்ஸ் வகைகள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். இவற்றில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும். 

*நார்ச்சத்தை பொறுமையாக அதிகரிப்பதன் மூலமாக உங்கள் குடல் பாக்டீரியாக்கள் அதற்கு தன்னை தக்கவமைத்துக்கொண்டு அசௌகரியம் ஏற்படுவதை குறைக்கும். 

*நார்ச்சத்து சிறந்த முறையில் செயல்படுவதற்கு நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது மலச்சிக்கல் ஏற்படுவதை தவிர்க்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Sobhita and NAga chaitanya not interested in Marriage திருமணத்தில் நாகசைதன்யா – சோபிதாவுக்கு விருப்பமில்லை.. பரபரப்பை கிளப்பிய நாகர்ஜூனா!
  • Views: - 122

    0

    0