கர்ப்பிணி பெண்கள் முதல் நீரிழிவு நோயாளிகள் வரை… அனைவருக்கும் நன்மை பயக்கும் பச்சை பயறு!!!
Author: Hemalatha Ramkumar27 October 2022, 3:38 pm
நாம் பெரும்பாலான உணவுகளில் பச்சை பயறு சேர்த்து சமைப்பது உண்டு. இது அதன் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்படுகிறது. பச்சைப் பயிரை முழுவதுமாகவோ அல்லது அரைத்தோ பயன்படுத்தலாம். இதனை நீண்ட நேரம் ஊறவைக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பதால் விரைவாக சமைக்கலாம். இப்போது பச்சை பயறு சாப்பிடுவதன் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
இது எடை இழப்புக்கு உதவுகிறது:
பச்சை பயறு நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்தது. பச்சை பயறு மற்றும் சாதம் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு சிறந்த உணவு விருப்பங்கள் ஆகும்.
இது நீரிழிவு நோயின் அறிகுறிகளை குறைக்க உதவும்:
பச்சைப்பயறு குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்தது. இது தவிர, பச்சை பயறில் புரதம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உடலில் இன்சுலின் மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவும்.
இது செரிமானத்தை மேம்படுத்துகிறது:
பச்சை பயிறில் பெக்டின் என்ற ஒரு வகை கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது உங்கள் குடல் மற்றும் செரிமான பாதை வழியாக உணவை எளிதாக இயக்க உதவுவதன் மூலம் உங்கள் குடலை சீராக வைத்திருக்க உதவும். மேலும் இது ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.
இது இரத்த அழுத்தத்தை குறைக்கிறது:
உயர் இரத்த அழுத்தம் என்பது இதய நோய் அபாயத்தை ஏற்படுத்துகிறது. பச்சை பயிறை உங்கள் உணவில் சேர்ப்பது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்:
ஃபோலேட் நிறைந்துள்ளதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு பச்சை பயிறு ஒரு ஆரோக்கியமான உணவு விருப்பமாகும். கர்ப்ப காலத்தில் ஃபோலேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது கருவில் உள்ள உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியம். இது மட்டுமின்றி, பச்சைப்பயறு, கர்ப்ப காலத்தில் தேவைப்படும் மற்ற சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்தும் கொண்டுள்ளது.