மலட்டுத்தன்மையை போக்கி கருவுறுதலை அதிகரிக்கும் கொய்யாப்பழம்!!!

Author: Hemalatha Ramkumar
3 December 2022, 10:31 am

ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ள கொய்யாப்பழம் நமது ஆரோக்கியத்திற்கு எக்கச்சக்கமாக நன்மை பயக்கும். கொய்யாப்பழத்தில் ஆன்டிஆக்சிடன்டுகள், லைகோபீன் மற்றும் வைட்டமின் C காணப்படுகிறது. கொய்யாப்பழத்தில் ஃபோலேட் கருவுறுதல் செயல்முறையை மேம்படுத்துகிறது.

வேற்றுமை இல்லாமல் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவருக்கும் கொய்யாப்பழம் நன்மை பயக்கும். கர்ப்பிணி பெண்களுக்கும் கொய்யாப்பழம் சிறந்தது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிட கொய்யாப்பழம் ஏற்றது. நீங்கள் மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்தால் தவறாமல் கொய்யாப்பழம் சாப்பிட்டு வாருங்கள். மலச்சிக்கலில் இருந்து விரைவில் குணமடையலாம்.

கொய்யாப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம் சத்தானது உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது. அதோடு உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் நல்ல மாற்றம் தெரியும். மாதா மாதம் மாதவிடாய் பிரச்சினை உள்ள பெண்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு வர நிவாரணம் கிடைக்கும்.

எனினும் உயர் இரத்த அழுத்தம், வயிறு சார்ந்த பிரச்சினைகள் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடும் முன் மருத்துவர்களை அணுகுவது நல்லது. வயிற்றில் காணப்படும் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு கொய்யாப்பழம் ஏற்றது.

சர்க்கரை நோய் இருந்தால் ஒரு நாளைக்கு ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுங்கள். மலச்சிக்கலால் அவதிப்பட்டு வருபவர்கள் இரவு நேரத்தில் கொய்யாப்பழம் சாப்பிடலாம். உங்களுக்கு இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் கொய்யாப்பழம் அதிகம் சாப்பிட கூடாது. எந்த ஒரு உடல் சார்ந்த பிரச்சினையும் இல்லாதவர்கள் 2 முதல் 3 கொய்யாப்பழம் வரை ஒரு நாளில் சாப்பிடலாம்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 537

    0

    0